• Aug 05 2025

தொல்பொருள் தளங்களை இலவசமாக பார்வையிட சிறார்களுக்கு வாய்ப்பு

Chithra / Aug 5th 2025, 8:36 am
image


மத்திய கலாச்சார நிதியத்திற்குச் சொந்தமான திட்டங்களை பார்வையிட 18 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு இலவச அனுமதி வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

மத்திய கலாச்சார நிதிய நிர்வாக சபை இந்த முன்மொழிவை அங்கீகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூர் சிறார்களிடையே கலாச்சார பாரம்பரியத்தின் மீதான மதிப்பை ஏற்படுத்துவதும், தேசிய பாரம்பரிய இடங்கள் குறித்த விழிப்புணர்வை அதிகரிப்பதும் இதன் முதன்மை நோக்கமாகும்.

இதன்படி, சிகிரியா, யாபஹு, தம்புள்ளை உள்ளிட்ட மத்திய கலாச்சார நிதியத்திற்குச் சொந்தமான 26 தொல்பொருள் மதிப்புமிக்க தளங்களை நுழைவுச் சீட்டு இன்றி உள்ளூர் சிறார்கள் பார்வையிடலாம்.

இதற்கு இணையாக, வரையறுக்கப்பட்ட நிபந்தனைகளின் கீழ் வெளிநாட்டு சிறார்களுக்கும் இலவச நுழைவு அனுமதி வழங்கப்படவுள்ளதாக புத்தசாசன, மத மற்றும் கலாச்சார விவகார துணை அமைச்சர் கமகேதர திசாநாயக்க தெரிவித்தார்.

தொல்பொருள் தளங்களை இலவசமாக பார்வையிட சிறார்களுக்கு வாய்ப்பு மத்திய கலாச்சார நிதியத்திற்குச் சொந்தமான திட்டங்களை பார்வையிட 18 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு இலவச அனுமதி வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.மத்திய கலாச்சார நிதிய நிர்வாக சபை இந்த முன்மொழிவை அங்கீகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.உள்ளூர் சிறார்களிடையே கலாச்சார பாரம்பரியத்தின் மீதான மதிப்பை ஏற்படுத்துவதும், தேசிய பாரம்பரிய இடங்கள் குறித்த விழிப்புணர்வை அதிகரிப்பதும் இதன் முதன்மை நோக்கமாகும்.இதன்படி, சிகிரியா, யாபஹு, தம்புள்ளை உள்ளிட்ட மத்திய கலாச்சார நிதியத்திற்குச் சொந்தமான 26 தொல்பொருள் மதிப்புமிக்க தளங்களை நுழைவுச் சீட்டு இன்றி உள்ளூர் சிறார்கள் பார்வையிடலாம்.இதற்கு இணையாக, வரையறுக்கப்பட்ட நிபந்தனைகளின் கீழ் வெளிநாட்டு சிறார்களுக்கும் இலவச நுழைவு அனுமதி வழங்கப்படவுள்ளதாக புத்தசாசன, மத மற்றும் கலாச்சார விவகார துணை அமைச்சர் கமகேதர திசாநாயக்க தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement