ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட போடைஸ் தோட்ட என்.சீ பிரிவில் சிறுத்தை ஒன்று இரவில் சுற்றித் திரிவதால் பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பில் போடைஸ் தோட்டப் பிரிவு மக்கள் தெரிவிக்கையில்,
தோட்டத்திற்கு அருகிலுள்ள அடர்ந்த காட்டில் வசிக்கும் சிறுத்தை இரவில் எங்கள் வீடுகளுக்கு அருகில் இரை தேடி வருகின்றது.எங்கள் வீடுகளில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளான நாய்களை இரையாகவும் இழுத்துச் செல்கின்றது.
சிறுத்தை ஏற்கனவே சில் வீடுகளில் வளர்க்கப்படும் பல நாய்களை இரையாக எடுத்துச் சென்றுள்ளது. இதனால் தற்போதைய சூழ்நிலையில் இரவில் வீட்டை விட்டு வெளியேறுவது சாத்தியமில்லை .
எனவே தாம் வெளியே பயமின்றி நடமாடுவதற்கு ஹட்டன் போடைஸ் தோட்டத்தில் சுற்றித் திரியும் சிறுத்தையை பிடித்துச் சென்று அதற்குரிய பகுதியில் விடுவிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஹட்டன் தோட்டப் பகுதியில் சிறுத்தையின் நடமாட்டம் உள்ளதும் வீட்டில் வளர்க்கப்பட்ட நாயை சிறுத்தை இழுத்துச் செல்வதும் குறித்த பகுதியில் உள்ள ஒரு ஆசிரியரின் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கமராவில் பதிவாகியுள்ளது.
ஹட்டனில் சுற்றி திரியும் சிறுத்தை; அச்சத்தில் மக்கள் ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட போடைஸ் தோட்ட என்.சீ பிரிவில் சிறுத்தை ஒன்று இரவில் சுற்றித் திரிவதால் பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பில் போடைஸ் தோட்டப் பிரிவு மக்கள் தெரிவிக்கையில், தோட்டத்திற்கு அருகிலுள்ள அடர்ந்த காட்டில் வசிக்கும் சிறுத்தை இரவில் எங்கள் வீடுகளுக்கு அருகில் இரை தேடி வருகின்றது.எங்கள் வீடுகளில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளான நாய்களை இரையாகவும் இழுத்துச் செல்கின்றது. சிறுத்தை ஏற்கனவே சில் வீடுகளில் வளர்க்கப்படும் பல நாய்களை இரையாக எடுத்துச் சென்றுள்ளது. இதனால் தற்போதைய சூழ்நிலையில் இரவில் வீட்டை விட்டு வெளியேறுவது சாத்தியமில்லை .எனவே தாம் வெளியே பயமின்றி நடமாடுவதற்கு ஹட்டன் போடைஸ் தோட்டத்தில் சுற்றித் திரியும் சிறுத்தையை பிடித்துச் சென்று அதற்குரிய பகுதியில் விடுவிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். ஹட்டன் தோட்டப் பகுதியில் சிறுத்தையின் நடமாட்டம் உள்ளதும் வீட்டில் வளர்க்கப்பட்ட நாயை சிறுத்தை இழுத்துச் செல்வதும் குறித்த பகுதியில் உள்ள ஒரு ஆசிரியரின் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கமராவில் பதிவாகியுள்ளது.