2025 ஆம் ஆண்டுக்கான வடமாகாண விளையாட்டு விழாவில் முல்லைத்தீவு மாவட்டம் இரண்டாம் இடத்தினை பெற்றுக் கொண்டது.
கடந்த சனி ஞாயிறு மாகாண விளையாட்டுத் திணைக்களத்தினால் வவுனியா ஓமந்தை விளையாட்டரங்கில் நடைபெற்ற வடமாகாண இறுதி விளையாட்டு நிகழ்வானது ஆண்கள் உதைபந்தாட்டம், மெய்வல்லுனர் நிகழ்வுகளுடன் நடைபெற்று முடிவடைந்தமை குறிப்பிடத்தக்கது.
குறித்த விளையாட்டு விழாவில் வடமாகாண ஆளுநர் வேதநாயகன் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.
வடக்கு மாகாண கல்வி, கலாசார அலுவல்கள், விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் ஏற்பாட்டில் வடக்கு மாகாண விளையாட்டு விழா ஓமந்தையிலுள்ள விளையாட்டுத் திடலில் வடமாகாண அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிறஞ்சன் தலைமையில் நடைபெற்றது.
வடக்கு மாகாண பிரதம செயலாளர் திருமதி தனுஜா முருகேசன் சிறப்பு விருந்தினராகவும், வவுனியா மாவட்டச் செயலாளர் பி.ஏ.சரத் சந்திர கௌரவ விருந்தினராகவும் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சி.குணபாலன் அவர்களும் கலந்து சிறப்பித்தார்.
2025ம் ஆண்டின் நடைபெற்ற வடமாகாண அனைத்து விளையாட்டு நிகழ்வுகளிலும் இறுதி முடிவாக மாவட்டங்கள் பெற்றுக்கொண்ட பதக்கங்களில் அடிப்படையில் வடமாகாணத்தின் மாவட்டங்களின் விபரம்.
1ம் இடம் யாழ்ப்பாணம் மாவட்டம்
2ம்இடம் முல்லைத்தீவு மாவட்டம்.
3ம்இடம் வவுனியா மாவட்டம்
4ம்இடம் மன்னார் மாவட்டம்
5ம் இடம் கிளிநொச்சி மாவட்டம்
2025 ஆம் ஆண்டுக்கான வடமாகாண விளையாட்டு விழாவில் -முல்லைத்தீவு மாவட்டம் இரண்டாம் இடம் 2025 ஆம் ஆண்டுக்கான வடமாகாண விளையாட்டு விழாவில் முல்லைத்தீவு மாவட்டம் இரண்டாம் இடத்தினை பெற்றுக் கொண்டது.கடந்த சனி ஞாயிறு மாகாண விளையாட்டுத் திணைக்களத்தினால் வவுனியா ஓமந்தை விளையாட்டரங்கில் நடைபெற்ற வடமாகாண இறுதி விளையாட்டு நிகழ்வானது ஆண்கள் உதைபந்தாட்டம், மெய்வல்லுனர் நிகழ்வுகளுடன் நடைபெற்று முடிவடைந்தமை குறிப்பிடத்தக்கது.குறித்த விளையாட்டு விழாவில் வடமாகாண ஆளுநர் வேதநாயகன் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.வடக்கு மாகாண கல்வி, கலாசார அலுவல்கள், விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் ஏற்பாட்டில் வடக்கு மாகாண விளையாட்டு விழா ஓமந்தையிலுள்ள விளையாட்டுத் திடலில் வடமாகாண அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிறஞ்சன் தலைமையில் நடைபெற்றது. வடக்கு மாகாண பிரதம செயலாளர் திருமதி தனுஜா முருகேசன் சிறப்பு விருந்தினராகவும், வவுனியா மாவட்டச் செயலாளர் பி.ஏ.சரத் சந்திர கௌரவ விருந்தினராகவும் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சி.குணபாலன் அவர்களும் கலந்து சிறப்பித்தார்.2025ம் ஆண்டின் நடைபெற்ற வடமாகாண அனைத்து விளையாட்டு நிகழ்வுகளிலும் இறுதி முடிவாக மாவட்டங்கள் பெற்றுக்கொண்ட பதக்கங்களில் அடிப்படையில் வடமாகாணத்தின் மாவட்டங்களின் விபரம்.1ம் இடம் யாழ்ப்பாணம் மாவட்டம்2ம்இடம் முல்லைத்தீவு மாவட்டம். 3ம்இடம் வவுனியா மாவட்டம் 4ம்இடம் மன்னார் மாவட்டம்5ம் இடம் கிளிநொச்சி மாவட்டம்