• Aug 04 2025

கண்கவர் அலங்காரங்களுடன் நல்லூரானின் 7ஆம் திருவிழா; முருகனின் ஆசியை வேண்டி குவியும் மக்கள் கூட்டம்!

shanuja / Aug 4th 2025, 5:35 pm
image

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் 7 ஆம் நாள் திருவிழா உணர்வுமிகு பக்தியுடன் சிறப்பாக இன்று இடம்பெற்றுள்ளது. 


நல்லூரானின் மஹோற்சவம் கடந்த 29ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் விமர்சையாக ஆரம்பமானது. 


தொடர்ச்சியாக 25 நாள் இடம்பெறவுள்ள மஹோற்சவத்தில் இன்று 7 ஆம் நாள் திருவிழா பக்திபூர்வமாக இடம்பெற்று வருகின்றது. 


இன்றைய திருவிழாவில் காலை, மதிய விசேட பூசை வழிபாடுகள் சிறப்பாக இடம்பெற்று முடிந்த நிலையில் மாலைப்பொழுதின் விசேட பூசை வழிபாடுகள் தற்போது இடம்பெறுகின்றது. 


மூலஸ்தானப் பூசை வழிபாடுகளைத் தொடர்ந்து கொடிமரத்தில் விசேட வழிபாடுகள் இடம்பெறுகின்றன. அதனைத் தொடர்ந்து வசந்தமண்டபப் பூசை இடம்பெற்று நல்லூரான் உலா வரவுள்ளார். 


ஒவ்வொரு நாள் திருவிழாவிலும் பக்தர்களை மெச்சும் வகையில் நல்லூரானின் அலங்காரத்துடன் காட்சியளிப்பது சிறப்பம்சமாகும். 


அதேபோன்று இன்றைய திருவிழாவில் கண்கவர் அலங்காரங்களுடன் மக்களைக் கவரும் வகையில்  முருகப் பெருமான் காட்சியளிப்பதை அவதானிக்க முடிகின்றது. 


அலங்காரக் கந்தனைக் காண பல பகுதிகளிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வருகை தருவது வழமையானதொன்றாகும். 


அந்த வகையில் இன்றைய 7ஆம் நாள் திருவிழாவிலும் நல்லூரானைக் காண பக்தர்கள் புடைசூழ்ந்து வருகை தருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கண்கவர் அலங்காரங்களுடன் நல்லூரானின் 7ஆம் திருவிழா; முருகனின் ஆசியை வேண்டி குவியும் மக்கள் கூட்டம் வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் 7 ஆம் நாள் திருவிழா உணர்வுமிகு பக்தியுடன் சிறப்பாக இன்று இடம்பெற்றுள்ளது. நல்லூரானின் மஹோற்சவம் கடந்த 29ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் விமர்சையாக ஆரம்பமானது. தொடர்ச்சியாக 25 நாள் இடம்பெறவுள்ள மஹோற்சவத்தில் இன்று 7 ஆம் நாள் திருவிழா பக்திபூர்வமாக இடம்பெற்று வருகின்றது. இன்றைய திருவிழாவில் காலை, மதிய விசேட பூசை வழிபாடுகள் சிறப்பாக இடம்பெற்று முடிந்த நிலையில் மாலைப்பொழுதின் விசேட பூசை வழிபாடுகள் தற்போது இடம்பெறுகின்றது. மூலஸ்தானப் பூசை வழிபாடுகளைத் தொடர்ந்து கொடிமரத்தில் விசேட வழிபாடுகள் இடம்பெறுகின்றன. அதனைத் தொடர்ந்து வசந்தமண்டபப் பூசை இடம்பெற்று நல்லூரான் உலா வரவுள்ளார். ஒவ்வொரு நாள் திருவிழாவிலும் பக்தர்களை மெச்சும் வகையில் நல்லூரானின் அலங்காரத்துடன் காட்சியளிப்பது சிறப்பம்சமாகும். அதேபோன்று இன்றைய திருவிழாவில் கண்கவர் அலங்காரங்களுடன் மக்களைக் கவரும் வகையில்  முருகப் பெருமான் காட்சியளிப்பதை அவதானிக்க முடிகின்றது. அலங்காரக் கந்தனைக் காண பல பகுதிகளிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வருகை தருவது வழமையானதொன்றாகும். அந்த வகையில் இன்றைய 7ஆம் நாள் திருவிழாவிலும் நல்லூரானைக் காண பக்தர்கள் புடைசூழ்ந்து வருகை தருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement