பதுளை, பசறை, 10 ஆம் கட்டை பகுதியில் புதிதாக நிர்மாணிக்கப்படும் வீட்டிற்குள் இரண்டு இளைஞர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
இவ்வாறு உயிரிழந்தவர்கள் பசறை மற்றும் கம்பளை பகுதிகளை சேர்ந்த 28 மற்றும் 33 வயதுடைய இரண்டு இளைஞர்கள் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று மதியம் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வீடொன்றிற்கு சென்ற சிறுவன் ஒருவர் ஜன்னல் வழியாக வீட்டினுள் எட்டி பார்த்த போது, இருவர் கீழே விழுந்து கிடப்பதை அவதானித்துள்ளார்.
உடனே அயலவர்களுக்கு தெரிவித்ததை தொடர்ந்து அயலவர்களினால் 1990 அவசர உயிர் காவு வண்டிக்கு அறிவிக்கப்பட்டது.
பின்னர் காவு வண்டி அவ்விடத்திற்கு வந்த பின்னர் காவு வண்டியில் பணிபுரியும் ஊழியர்கள் அவ்விரு நபர்களையும் பரிசோதித்த போது இரண்டு ஆண்களும் உயிரிழந்திருந்தமை தெரியவந்துள்ளது.
இதன் பின்னர் பசறை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதுடன் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த பசறை பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டனர்.
குறித்த இருவரும் கப்பொலை பகுதியில் உள்ள தனது உறவினர் வீடொன்றிற்கு செல்வதாக வீட்டில் கூறிவிட்டு அவர்களது வீட்டுக்கு மேற்பகுதியில் அமைந்துள்ள புதிதாக நிர்மாணிக்கப்படும் வீடொன்றிற்கு சென்று அங்கு போதை பாவனையில் ஈடுபட்டு இருக்கலாம் எனவும், போதை அதிகரித்தமையே மரணத்திற்கான காரணமாக இருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
மரணித்த இருவரும் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்கள் எனவும் இறந்தவர் ஒருவரின் கையில் போதைமருந்தை உட்செலுத்தக்கூடிய ஊசி ஒன்றும் காணப்பட்டதாகவும், அவர்கள் மீது போதைப்பொருள் தொடர்பான வழக்குகள் காணப்படுவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இது தொடர்பாக பசறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அதீத போதைப்பொருள் பாவனை; பறிபோன இரு இளைஞர்கர்களின் உயிர்கள் பதுளை, பசறை, 10 ஆம் கட்டை பகுதியில் புதிதாக நிர்மாணிக்கப்படும் வீட்டிற்குள் இரண்டு இளைஞர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.இவ்வாறு உயிரிழந்தவர்கள் பசறை மற்றும் கம்பளை பகுதிகளை சேர்ந்த 28 மற்றும் 33 வயதுடைய இரண்டு இளைஞர்கள் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.நேற்று மதியம் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வீடொன்றிற்கு சென்ற சிறுவன் ஒருவர் ஜன்னல் வழியாக வீட்டினுள் எட்டி பார்த்த போது, இருவர் கீழே விழுந்து கிடப்பதை அவதானித்துள்ளார். உடனே அயலவர்களுக்கு தெரிவித்ததை தொடர்ந்து அயலவர்களினால் 1990 அவசர உயிர் காவு வண்டிக்கு அறிவிக்கப்பட்டது.பின்னர் காவு வண்டி அவ்விடத்திற்கு வந்த பின்னர் காவு வண்டியில் பணிபுரியும் ஊழியர்கள் அவ்விரு நபர்களையும் பரிசோதித்த போது இரண்டு ஆண்களும் உயிரிழந்திருந்தமை தெரியவந்துள்ளது.இதன் பின்னர் பசறை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதுடன் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த பசறை பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டனர். குறித்த இருவரும் கப்பொலை பகுதியில் உள்ள தனது உறவினர் வீடொன்றிற்கு செல்வதாக வீட்டில் கூறிவிட்டு அவர்களது வீட்டுக்கு மேற்பகுதியில் அமைந்துள்ள புதிதாக நிர்மாணிக்கப்படும் வீடொன்றிற்கு சென்று அங்கு போதை பாவனையில் ஈடுபட்டு இருக்கலாம் எனவும், போதை அதிகரித்தமையே மரணத்திற்கான காரணமாக இருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.மரணித்த இருவரும் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்கள் எனவும் இறந்தவர் ஒருவரின் கையில் போதைமருந்தை உட்செலுத்தக்கூடிய ஊசி ஒன்றும் காணப்பட்டதாகவும், அவர்கள் மீது போதைப்பொருள் தொடர்பான வழக்குகள் காணப்படுவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.இது தொடர்பாக பசறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.