பாதாள உலகக் குழுவினர் கைது செய்யப்படுவது சிறந்த விடயமாகும். ஆனால் அதனை ஊடகங்களில் பிரசாரங்களை முன்னெடுத்து கொண்டாடப்பட வேண்டிய ஒன்றல்ல என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிரேம்நாத் சி தொலவத்த தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
பாதாள உலகக் குழுக்களுடன் தொடர்புடைய சிலர் கைது செய்யப்பட்டு நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்களை அழைத்து வரும் போது அமைச்சரும் பொலிஸ்மா அதிபரும் எதற்காக விமான நிலையத்துக்குச் செல்கின்றனர்?கேலிக் கூத்து காண்பித்துக் கொண்டிருக்கின்றனர்.
யுத்தம் நிறைவடைந்த போது இவர்கள் ஆட்சியில் இருந்திருந்தால் 159 பேரும் நந்திக்கடலுக்குச் சென்று குளித்து நடனமாடியிருப்பர்.
கொண்டாடப்பட வேண்டிய விடயங்களை விடுத்து பாதாள உலகக் குழுவினரை கைது செய்வதை கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர். இவர்கள் கைது செய்யப்பட்மை சிறந்த விடயம். ஆனால் அது இந்தளவுக்கு கொண்டாடப்பட வேண்டியதல்ல.
இது மிகவும் சூட்சுமமாக கையாளப்பட வேண்டிய விடயமாகும். விசாரணைகளை முன்னெடுத்த அதிகாரிகளின் முகங்களை ஊடகங்களில் பகிரங்கமாகக் காண்பிக்கின்றனர்.
இவ்வாறான நடவடிக்கைகள் எஞ்சியிருக்கும் பாதாள உலகக் குழுக்குழுவினர் தம்மைப் பாதுகாத்துக் கொள்ள இலகுவாக இருக்கும்.
பாதாள உலகக் குழுக்களை கட்டுப்படுத்துவற்கான நகர்வுகள் இரகசியமானவையாக இருக்க வேண்டும். ஏனையோர் மீது குறை கூறிக் கொண்டிருக்காமல் தமது பொறுப்பினை நிறைவேற்றுமாறு அரசாங்கத்திடம் கேட்டுக் கொள்கின்றோம். என்றார்.
பாதாள உலகக் குழுவினரை பகிரங்கமாகக் கையாள்வது ஆபத்து கேலிக் கூத்தாடும் அரசு - பிரேம்நாத் குற்றச்சாட்டு பாதாள உலகக் குழுவினர் கைது செய்யப்படுவது சிறந்த விடயமாகும். ஆனால் அதனை ஊடகங்களில் பிரசாரங்களை முன்னெடுத்து கொண்டாடப்பட வேண்டிய ஒன்றல்ல என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிரேம்நாத் சி தொலவத்த தெரிவித்தார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,பாதாள உலகக் குழுக்களுடன் தொடர்புடைய சிலர் கைது செய்யப்பட்டு நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். சந்தேகநபர்களை அழைத்து வரும் போது அமைச்சரும் பொலிஸ்மா அதிபரும் எதற்காக விமான நிலையத்துக்குச் செல்கின்றனர்கேலிக் கூத்து காண்பித்துக் கொண்டிருக்கின்றனர். யுத்தம் நிறைவடைந்த போது இவர்கள் ஆட்சியில் இருந்திருந்தால் 159 பேரும் நந்திக்கடலுக்குச் சென்று குளித்து நடனமாடியிருப்பர்.கொண்டாடப்பட வேண்டிய விடயங்களை விடுத்து பாதாள உலகக் குழுவினரை கைது செய்வதை கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர். இவர்கள் கைது செய்யப்பட்மை சிறந்த விடயம். ஆனால் அது இந்தளவுக்கு கொண்டாடப்பட வேண்டியதல்ல.இது மிகவும் சூட்சுமமாக கையாளப்பட வேண்டிய விடயமாகும். விசாரணைகளை முன்னெடுத்த அதிகாரிகளின் முகங்களை ஊடகங்களில் பகிரங்கமாகக் காண்பிக்கின்றனர்.இவ்வாறான நடவடிக்கைகள் எஞ்சியிருக்கும் பாதாள உலகக் குழுக்குழுவினர் தம்மைப் பாதுகாத்துக் கொள்ள இலகுவாக இருக்கும். பாதாள உலகக் குழுக்களை கட்டுப்படுத்துவற்கான நகர்வுகள் இரகசியமானவையாக இருக்க வேண்டும். ஏனையோர் மீது குறை கூறிக் கொண்டிருக்காமல் தமது பொறுப்பினை நிறைவேற்றுமாறு அரசாங்கத்திடம் கேட்டுக் கொள்கின்றோம். என்றார்.