புதிய கல்விச் சீர்திருத்தச் செயல்பாட்டின் கீழ் 6ஆம் ஆண்டு மாணவர்களுக்கான ஆங்கிலக் கல்வித் தொகுதியில் சர்ச்சைக்குரிய இணையதள முகவரி இடம்பெற்றமை பாரதூரமான குற்றமென்றும், இது தொடர்பாக கடுமையான நடவடிக்கை எடுக்கப் பின்நிற்கப் போவதில்லை என்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
மல்பத்து மற்றும் அஸ்கிரி பீட மகாநாயக்க தேரர்களை இன்று (08) சந்தித்து ஆசி பெற்றபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.
தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவிற்கு அறிவிக்கப்பட்டு, குறித்த இணையதளத்திற்கான அணுகல் ஏற்கனவே முடக்கப்பட்டுள்ளதாகவும், இது குறித்த ஆரம்பகட்ட விசாரணைகளைத் தொடர்ந்து முறையான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்தச் சந்திப்பின்போது, புதிய கல்விச் சீர்திருத்தத்தின் கீழ் தரம் 01 முதல் 06 வரை விநியோகிக்கப்படவுள்ள 106 பாடநூல்கள் அடங்கிய தொகுதியினை மகாநாயக்க தேரர்களிடம் பிரதமர் கையளித்தார்.
ஆங்கிலப் பாடத் தொகுதியில் ஏற்பட்ட தவறு குறித்து விளக்கிய அவர்,ஆரம்பகட்ட ஆய்வு அறிக்கையின்படி பாடநூலைப் பரிசோதித்த எந்தவொரு கட்டத்திலும் இந்த இணையதள முகவரி அடையாளம் காணப்படவில்லை என்பது பாரிய பிரச்சினையெனச் சுட்டிக்காட்டினார்.
இத் தவறை அடிப்படையாகக் கொண்டு ஏனைய பாடநூல்களை மீளாய்வு செய்தபோது, எழுத்துப் பிழைகள் உள்ளிட்ட மேலும் சில குறைபாடுகள் கண்டறியப்பட்டதாக பிரதமர் தெரிவித்தார்.
இதன் காரணமாக, தற்போது தேசிய கல்வி நிறுவனத்திடம் உள்ள பாடநூல் தயாரிப்பு மற்றும் அச்சிடல் பொறுப்பை மீண்டும் கல்வி வெளியீட்டுத் திணைக்களத்திடம் ஒப்படைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
சுமார் 5,000 ஆசிரியர்களுக்கு இந்தப் பாடநூல் மூலம் பயிற்சிகள் வழங்கப்பட்ட போதிலும், எவரது கவனத்திற்கும் இது எட்டவில்லை எனத் தெரிவித்த பிரதமர், இனிவரும் காலங்களில் பாடசாலைப் பாடநூல்களில் இணையதளங்களுக்கான நேரடி இணைப்புகளை (Links) உள்ளடக்காதிருக்கக் கொள்கை ரீதியான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக வலியுறுத்தினார்.
அத்துடன், கல்வித் துறையில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் போது சிறுவர் பாதுகாப்புத் தொடர்பான வழிகாட்டல்கள் மற்றும் கொள்கை வரைபுகள் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
கல்விச் சீர்திருத்தம் - பிரதமரால் மகாநாயக்க தேரர்களுக்கு விளக்கமளிப்பு புதிய கல்விச் சீர்திருத்தச் செயல்பாட்டின் கீழ் 6ஆம் ஆண்டு மாணவர்களுக்கான ஆங்கிலக் கல்வித் தொகுதியில் சர்ச்சைக்குரிய இணையதள முகவரி இடம்பெற்றமை பாரதூரமான குற்றமென்றும், இது தொடர்பாக கடுமையான நடவடிக்கை எடுக்கப் பின்நிற்கப் போவதில்லை என்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.மல்பத்து மற்றும் அஸ்கிரி பீட மகாநாயக்க தேரர்களை இன்று (08) சந்தித்து ஆசி பெற்றபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவிற்கு அறிவிக்கப்பட்டு, குறித்த இணையதளத்திற்கான அணுகல் ஏற்கனவே முடக்கப்பட்டுள்ளதாகவும், இது குறித்த ஆரம்பகட்ட விசாரணைகளைத் தொடர்ந்து முறையான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.இந்தச் சந்திப்பின்போது, புதிய கல்விச் சீர்திருத்தத்தின் கீழ் தரம் 01 முதல் 06 வரை விநியோகிக்கப்படவுள்ள 106 பாடநூல்கள் அடங்கிய தொகுதியினை மகாநாயக்க தேரர்களிடம் பிரதமர் கையளித்தார்.ஆங்கிலப் பாடத் தொகுதியில் ஏற்பட்ட தவறு குறித்து விளக்கிய அவர்,ஆரம்பகட்ட ஆய்வு அறிக்கையின்படி பாடநூலைப் பரிசோதித்த எந்தவொரு கட்டத்திலும் இந்த இணையதள முகவரி அடையாளம் காணப்படவில்லை என்பது பாரிய பிரச்சினையெனச் சுட்டிக்காட்டினார்.இத் தவறை அடிப்படையாகக் கொண்டு ஏனைய பாடநூல்களை மீளாய்வு செய்தபோது, எழுத்துப் பிழைகள் உள்ளிட்ட மேலும் சில குறைபாடுகள் கண்டறியப்பட்டதாக பிரதமர் தெரிவித்தார்.இதன் காரணமாக, தற்போது தேசிய கல்வி நிறுவனத்திடம் உள்ள பாடநூல் தயாரிப்பு மற்றும் அச்சிடல் பொறுப்பை மீண்டும் கல்வி வெளியீட்டுத் திணைக்களத்திடம் ஒப்படைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.சுமார் 5,000 ஆசிரியர்களுக்கு இந்தப் பாடநூல் மூலம் பயிற்சிகள் வழங்கப்பட்ட போதிலும், எவரது கவனத்திற்கும் இது எட்டவில்லை எனத் தெரிவித்த பிரதமர், இனிவரும் காலங்களில் பாடசாலைப் பாடநூல்களில் இணையதளங்களுக்கான நேரடி இணைப்புகளை (Links) உள்ளடக்காதிருக்கக் கொள்கை ரீதியான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக வலியுறுத்தினார்.அத்துடன், கல்வித் துறையில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் போது சிறுவர் பாதுகாப்புத் தொடர்பான வழிகாட்டல்கள் மற்றும் கொள்கை வரைபுகள் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.