• May 15 2025

முல்லைத்தீவில் இராணுவ பேருந்துடன் மோதி விபத்து...! இளம் தாய்க்கு ஏற்பட்ட நிலை...!samugammedia

Sharmi / Dec 11th 2023, 8:33 am
image

முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்ப்பட்ட முல்லைத்தீவு கொக்கிளாய் பிரதான வீதியில் சிலாவத்தை பகுதியில் நேற்று(10) இரவு இராணுவத்தினரின் பேருந்துடன் மோதிய விபத்தில் சிலாவத்தை பகுதியினை சேர்ந்த இளம் தாயும் மகளும் படுகாயமடைந்துள்ளார்கள்.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

நேற்று (10) இரவு மழை பெய்து கொண்டிருக்கையில் சிலாவத்தை பகுதியில் இருந்து உந்துருளியில் பயணித்துக்கொண்டிந்த இளம் தாயும் சிறுமி ஒருவரும் வீதியில் நின்ற மாட்டுடன் மோதி வீதியால் சென்று கொண்டிருந்த இராணுவ பேருந்துக்குள் சிக்கி விபத்துக்குள்ளாகியுள்ளனர்.

இதன்போது படுகாயமடைந்த சிலாவத்தை பகுதியினை சேர்ந்த இளம் தாயும் சிறுமியும் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்கள்.

சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன் இராணுவத்தினரின் பேருந்தின் சாரதியினையும் பேருந்தையும் முல்லைத்தீவு பொலிஸ் நிலையம் கொண்டு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


முல்லைத்தீவில் இராணுவ பேருந்துடன் மோதி விபத்து. இளம் தாய்க்கு ஏற்பட்ட நிலை.samugammedia முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்ப்பட்ட முல்லைத்தீவு கொக்கிளாய் பிரதான வீதியில் சிலாவத்தை பகுதியில் நேற்று(10) இரவு இராணுவத்தினரின் பேருந்துடன் மோதிய விபத்தில் சிலாவத்தை பகுதியினை சேர்ந்த இளம் தாயும் மகளும் படுகாயமடைந்துள்ளார்கள்.இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,நேற்று (10) இரவு மழை பெய்து கொண்டிருக்கையில் சிலாவத்தை பகுதியில் இருந்து உந்துருளியில் பயணித்துக்கொண்டிந்த இளம் தாயும் சிறுமி ஒருவரும் வீதியில் நின்ற மாட்டுடன் மோதி வீதியால் சென்று கொண்டிருந்த இராணுவ பேருந்துக்குள் சிக்கி விபத்துக்குள்ளாகியுள்ளனர்.இதன்போது படுகாயமடைந்த சிலாவத்தை பகுதியினை சேர்ந்த இளம் தாயும் சிறுமியும் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்கள்.சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன் இராணுவத்தினரின் பேருந்தின் சாரதியினையும் பேருந்தையும் முல்லைத்தீவு பொலிஸ் நிலையம் கொண்டு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement

Buy Now