• Aug 01 2025

இந்த வருடம் 1.3 மில்லியனைத் தாண்டிய சுற்றுலாப் பயணிகளின் வருகை!

shanuja / Jul 31st 2025, 12:43 pm
image

2025 ஆம் ஆண்டில்  இதுவரை 1.3 மில்லியனுக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையகம் தெரிவித்துள்ளது.


ஜனவரி 1 முதல் ஜூலை 27 வரை மொத்தம் 1,341,953 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையகம்  தெரிவித்துள்ளது. 


சுற்றுலாப் பயணிகளில் பெரும்பாலானோர் இந்தியர்கள் ஆவார். அதாவது 274,919 இந்திய சுற்றுலாப் பயணிகள் இந்த ஆண்டில் வருகை தந்துள்ளனர். 


கூடுதலாக, இங்கிலாந்து, ரஷ்யா, ஜெர்மனி, சீனா, பிரான்ஸ், ஆஸ்திரேலியா மற்றும் நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகளிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் கணிசமான எண்ணிக்கையில்  நாட்டை வந்தடைந்தனர். 


இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையகத்தின் தரவுகளின்படி, ஜூலை 27 நாட்களில் 173,909 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்தனர். 


மேலும்,  குறித்த மாதத்தில் அதிகபட்ச சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை ஜூலை 26 ஆம் தேதி பதிவாகியுள்ளது என்று இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையகம்  தெரிவித்துள்ளது

இந்த வருடம் 1.3 மில்லியனைத் தாண்டிய சுற்றுலாப் பயணிகளின் வருகை 2025 ஆம் ஆண்டில்  இதுவரை 1.3 மில்லியனுக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையகம் தெரிவித்துள்ளது.ஜனவரி 1 முதல் ஜூலை 27 வரை மொத்தம் 1,341,953 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையகம்  தெரிவித்துள்ளது. சுற்றுலாப் பயணிகளில் பெரும்பாலானோர் இந்தியர்கள் ஆவார். அதாவது 274,919 இந்திய சுற்றுலாப் பயணிகள் இந்த ஆண்டில் வருகை தந்துள்ளனர். கூடுதலாக, இங்கிலாந்து, ரஷ்யா, ஜெர்மனி, சீனா, பிரான்ஸ், ஆஸ்திரேலியா மற்றும் நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகளிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் கணிசமான எண்ணிக்கையில்  நாட்டை வந்தடைந்தனர். இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையகத்தின் தரவுகளின்படி, ஜூலை 27 நாட்களில் 173,909 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்தனர். மேலும்,  குறித்த மாதத்தில் அதிகபட்ச சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை ஜூலை 26 ஆம் தேதி பதிவாகியுள்ளது என்று இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையகம்  தெரிவித்துள்ளது

Advertisement

Advertisement

Advertisement