• Aug 01 2025

கொஸ்கொடவில் இளைஞன் சுட்டுக்கொலை; துப்பாக்கிதாரிகளின் மோட்டார் சைக்கிள் கண்டுபிடிப்பு!

Chithra / Jul 31st 2025, 11:32 am
image

 

கொஸ்கொடவில் துப்பாக்கிச் சூட்டுக்குப் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் மோட்டார் சைக்கிளை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

துப்பாக்கிச் சூடு நடந்த இடத்திலிருந்து சுமார் 6 கிலோமீற்றர் தொலைவில் உள்ள கொஸ்கொட அதுருவெல்ல பாலத்திற்கு அருகிலுள்ள ஆற்றில் மோட்டார் சைக்கிள் கைவிடப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொஸ்கொட துவாமோதர பகுதியில் இன்று  5.15 மணியளவில்  மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு இனந்தெரியாத துப்பாக்கிதாரிகளால்  மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக  பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி காவல்துறை கண்காணிப்பாளர் எஃப்.யு. வுட்லர் தெரிவித்தார்.

உயிரிழந்தவர் ஆமை வளர்ப்பு  மைய உரிமையாளரின் 23 வயதுடைய  மகனான அருத் மென்டிஸ் ஆவார்.

 இந்த சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

கொஸ்கொடவில் இளைஞன் சுட்டுக்கொலை; துப்பாக்கிதாரிகளின் மோட்டார் சைக்கிள் கண்டுபிடிப்பு  கொஸ்கொடவில் துப்பாக்கிச் சூட்டுக்குப் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் மோட்டார் சைக்கிளை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.துப்பாக்கிச் சூடு நடந்த இடத்திலிருந்து சுமார் 6 கிலோமீற்றர் தொலைவில் உள்ள கொஸ்கொட அதுருவெல்ல பாலத்திற்கு அருகிலுள்ள ஆற்றில் மோட்டார் சைக்கிள் கைவிடப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.கொஸ்கொட துவாமோதர பகுதியில் இன்று  5.15 மணியளவில்  மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு இனந்தெரியாத துப்பாக்கிதாரிகளால்  மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக  பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி காவல்துறை கண்காணிப்பாளர் எஃப்.யு. வுட்லர் தெரிவித்தார்.உயிரிழந்தவர் ஆமை வளர்ப்பு  மைய உரிமையாளரின் 23 வயதுடைய  மகனான அருத் மென்டிஸ் ஆவார். இந்த சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement