ரஷ்யாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, கடலில் பாறைகள் விழுவதிலிருந்து தப்பிக்க கடல் சிங்கங்கள் கடலில் குதிக்கும் காட்சி வைரலாகி வருகின்றது.
ரஷ்யாவின் கிழக்கு கடற்கரைப் பகுதியில் நேற்று காலை 8.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது.
ரஷ்யாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ரஷ்யா, ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், ஜப்பானின் கடலோரப் பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், கடல் அலைகள் ஒரு மீற்றர் வரை உயரக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் நிலநடுக்கத்தைத் தொடர்ந்து கடல் அலைகள் கொந்தளித்ததால் கடற்பாறைகளும் விழ ஆரம்பித்தது.
இதனால் பாறைகளில் இருந்த கடற்சிங்கங்கள் பாறைகள் விழுவதிலிருந்து உயிர் தப்புவதற்காக அலறியடித்து அங்குமிங்குமாகக் கடலில் குதித்துள்ளன.
கடல் கொந்தளித்து கடற்சிங்கங்கள் அலைகளிடையே ஆங்காங்கே அலறிக் குதிக்கும் காட்சி இணையத்தில் வெளிவந்து வைரலாகி வருகின்றது.
ரஷ்யாவின் பயங்கர நிலநடுக்கம் மக்களுக்கு மட்டுமன்றி விலங்குகளிடையேயும் உயிர் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்குது.
நிலநடுக்கத்தின் போது துள்ளிய கடற்சிங்கங்கள்;உயிரை காக்க செய்த செயல் இணையத்தில் வைரல் ரஷ்யாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, கடலில் பாறைகள் விழுவதிலிருந்து தப்பிக்க கடல் சிங்கங்கள் கடலில் குதிக்கும் காட்சி வைரலாகி வருகின்றது. ரஷ்யாவின் கிழக்கு கடற்கரைப் பகுதியில் நேற்று காலை 8.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது. ரஷ்யாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ரஷ்யா, ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.மேலும், ஜப்பானின் கடலோரப் பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், கடல் அலைகள் ஒரு மீற்றர் வரை உயரக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் நிலநடுக்கத்தைத் தொடர்ந்து கடல் அலைகள் கொந்தளித்ததால் கடற்பாறைகளும் விழ ஆரம்பித்தது. இதனால் பாறைகளில் இருந்த கடற்சிங்கங்கள் பாறைகள் விழுவதிலிருந்து உயிர் தப்புவதற்காக அலறியடித்து அங்குமிங்குமாகக் கடலில் குதித்துள்ளன. கடல் கொந்தளித்து கடற்சிங்கங்கள் அலைகளிடையே ஆங்காங்கே அலறிக் குதிக்கும் காட்சி இணையத்தில் வெளிவந்து வைரலாகி வருகின்றது. ரஷ்யாவின் பயங்கர நிலநடுக்கம் மக்களுக்கு மட்டுமன்றி விலங்குகளிடையேயும் உயிர் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்குது.