• Aug 01 2025

மீனவ சமூகத்திற்காக புதிய காப்பீட்டுத் திட்டம் அறிமுகம்

Chithra / Jul 31st 2025, 9:20 am
image

 

உப்பு நீர் மற்றும் நன்னீரில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடும் மீனவ சமூகத்தினருக்கு வாழ்வாதாரமாக வேளாண்மை மற்றும் விவசாய காப்பீட்டு சபையினால் விசேட காப்பீட்டுத் திட்டமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த காப்பீட்டுத் திட்டமானது பாதகமான வானிலை காரணமாக ஏற்படக்கூடிய உயிர் இழப்பு அல்லது பிற எதிர்பாராத நிகழ்வுகள் அல்லது மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடும்போது ஏற்படக்கூடிய ஏதேனும் விபத்துக்கு எதிராக காப்பீட்டுத் திட்டத்தை வழங்குகிறது.

மீன்பிடி நடவடிக்கைகளில் இருந்து விலகி இருக்கும்போது கூட, விபத்துகளால் ஏற்படும் இறப்புகள் அல்லது பிற குறைபாடுகளுக்கு சலுகைகள் வழங்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் கீழ் 2000 ரூபா என்ற வருடாந்த காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், திடீர் மரணம் ஏற்பட்டால் 12 இலட்சம் ரூபா இழப்பீடு வழங்கப்படும்.

அத்தோடு, விபத்தின் காரணமாக ஒரு கண் இழப்பு, ஒரு மூட்டு இழப்பு மற்றும் முழுமையான பேச்சு இழப்பு போன்ற விடயங்களுக்காக மிக விரைவாக இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மீனவ சமூகத்திற்காக புதிய காப்பீட்டுத் திட்டம் அறிமுகம்  உப்பு நீர் மற்றும் நன்னீரில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடும் மீனவ சமூகத்தினருக்கு வாழ்வாதாரமாக வேளாண்மை மற்றும் விவசாய காப்பீட்டு சபையினால் விசேட காப்பீட்டுத் திட்டமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.இந்த காப்பீட்டுத் திட்டமானது பாதகமான வானிலை காரணமாக ஏற்படக்கூடிய உயிர் இழப்பு அல்லது பிற எதிர்பாராத நிகழ்வுகள் அல்லது மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடும்போது ஏற்படக்கூடிய ஏதேனும் விபத்துக்கு எதிராக காப்பீட்டுத் திட்டத்தை வழங்குகிறது.மீன்பிடி நடவடிக்கைகளில் இருந்து விலகி இருக்கும்போது கூட, விபத்துகளால் ஏற்படும் இறப்புகள் அல்லது பிற குறைபாடுகளுக்கு சலுகைகள் வழங்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.இதன் கீழ் 2000 ரூபா என்ற வருடாந்த காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், திடீர் மரணம் ஏற்பட்டால் 12 இலட்சம் ரூபா இழப்பீடு வழங்கப்படும்.அத்தோடு, விபத்தின் காரணமாக ஒரு கண் இழப்பு, ஒரு மூட்டு இழப்பு மற்றும் முழுமையான பேச்சு இழப்பு போன்ற விடயங்களுக்காக மிக விரைவாக இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement