• Aug 01 2025

தோல்வியில் முடிந்த விடுதலைப் புலிகளின் ஆயுதம் தேடிய அகழ்வு பணி - கிளிநொச்சியில் சம்பவம்

Chithra / Jul 31st 2025, 12:43 pm
image

 

 

கிளிநொச்சியில் உள்ள  தனியார் காணியொன்றில் விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் இருக்கலாம் என சந்தேகித்து மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப்பணி, எவ்வித தடயங்களும் காணப்படாத நிலையில் இடைநிறுத்தப்பட்டுள்ளது. 

கிளிநொச்சி - தர்மபுரம்  பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட புன்னைநீராவி கிராம அலுவலர் பிரிவில் ஏ 35 பிரதான வீதியில் அருகே தனியார் காணி ஒன்றில், விடுதலைப் புலிகளின் ஆயுதம் இருப்பதாக கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக இன்றைய தினம் அகழ்வுப்பணி இடம்பெற்றது. 

கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற நீதவான் இஸ்மாத் ஜெமீல்  முன்னிலையில் பொலிசார், இராணுவத்தினர், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர், திணைக்களங்களின் உத்தியோகத்தர்கள் முன்னிலையில் அகழ்வுப்பணி மேற்கொள்ளப்பட்டது 

எனினும் இதன்போது எந்தவித தடயங்களும் கிடைக்காத நிலையில் அகழ்வுப்பணியை நீதவான் இடைநிறுத்தியமை குறிப்பிடத்தக்கது. 


தோல்வியில் முடிந்த விடுதலைப் புலிகளின் ஆயுதம் தேடிய அகழ்வு பணி - கிளிநொச்சியில் சம்பவம்   கிளிநொச்சியில் உள்ள  தனியார் காணியொன்றில் விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் இருக்கலாம் என சந்தேகித்து மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப்பணி, எவ்வித தடயங்களும் காணப்படாத நிலையில் இடைநிறுத்தப்பட்டுள்ளது. கிளிநொச்சி - தர்மபுரம்  பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட புன்னைநீராவி கிராம அலுவலர் பிரிவில் ஏ 35 பிரதான வீதியில் அருகே தனியார் காணி ஒன்றில், விடுதலைப் புலிகளின் ஆயுதம் இருப்பதாக கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக இன்றைய தினம் அகழ்வுப்பணி இடம்பெற்றது. கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற நீதவான் இஸ்மாத் ஜெமீல்  முன்னிலையில் பொலிசார், இராணுவத்தினர், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர், திணைக்களங்களின் உத்தியோகத்தர்கள் முன்னிலையில் அகழ்வுப்பணி மேற்கொள்ளப்பட்டது எனினும் இதன்போது எந்தவித தடயங்களும் கிடைக்காத நிலையில் அகழ்வுப்பணியை நீதவான் இடைநிறுத்தியமை குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement

Advertisement