இலங்கைக்கு கடத்த சரக்கு வாகனத்தில் தக்காளி பெட்டிகளுக்கு பின்புறம் 7 மூட்டைகளில் பதுக்கி வைத்து கொண்டுவரப்பட்ட 240 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதோடு, ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று வேம்பார் கடற்கரை அருகே சந்தேகத்திற்கிடமான வாகனம் நின்று கொண்டதை பார்த்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது முன்னுக்குப் பின் முரணான தகவலை வாகன சாரதி கூறியுள்ளார்.
தொடர்ந்து, மாவட்ட போதை பொருட்கள் கடத்தல் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
பின்னர் வாகனத்தை சோதனையிட்ட போது வாகனத்தில் தக்காளி கூடைகளுக்கு பின்புறம் மூட்டை மூட்டையாக கஞ்சா இருப்பது தெரியவந்தது.
மேலும், 50 லட்ச ரூபாய் மதிப்பிலான 240 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதன் சர்வதேச மதிப்பு 1 கோடி ரூபாய் இருக்கும் என கூறப்படுகிறது.
இது தொடர்பாக வாகன சாரதியிடம் விசாரணை மேற்கொண்ட போது படகு மூலம் இலங்கைக்கு கடத்த முயன்றது தெரியவந்தது.
இலங்கைக்கு கடத்தவிருந்த 240 கிலோ கஞ்சா இந்தியாவில் பறிமுதல் இலங்கைக்கு கடத்த சரக்கு வாகனத்தில் தக்காளி பெட்டிகளுக்கு பின்புறம் 7 மூட்டைகளில் பதுக்கி வைத்து கொண்டுவரப்பட்ட 240 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதோடு, ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.நேற்று வேம்பார் கடற்கரை அருகே சந்தேகத்திற்கிடமான வாகனம் நின்று கொண்டதை பார்த்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது முன்னுக்குப் பின் முரணான தகவலை வாகன சாரதி கூறியுள்ளார்.தொடர்ந்து, மாவட்ட போதை பொருட்கள் கடத்தல் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.பின்னர் வாகனத்தை சோதனையிட்ட போது வாகனத்தில் தக்காளி கூடைகளுக்கு பின்புறம் மூட்டை மூட்டையாக கஞ்சா இருப்பது தெரியவந்தது.மேலும், 50 லட்ச ரூபாய் மதிப்பிலான 240 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.இதன் சர்வதேச மதிப்பு 1 கோடி ரூபாய் இருக்கும் என கூறப்படுகிறது. இது தொடர்பாக வாகன சாரதியிடம் விசாரணை மேற்கொண்ட போது படகு மூலம் இலங்கைக்கு கடத்த முயன்றது தெரியவந்தது.