சர்ச்சைக்குரிய 323 கொள்கலன்கள் தொடர்பில் சர்வதேச புலனாய்வு பிரிவு இலங்கைக்கு அறிக்கை சமர்ப்பித்ததா இல்லையா என்பதை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்
போதைப்பொருள் விவகாரம் நாட்டின் தற்போதைய பிரச்சினையாக காணப்படுகிறது.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் அரசாங்கம் நுவரெலியாவில் ஐஸ் போதைப்பொருள் உற்பத்தி கைத்தொழில்சாலையை ஆரம்பித்துள்ளது.
கெஹல்பத்தர பத்மே என்ற நபர் அண்மையில் கைது செய்யப்பட்டார். பொலிஸ்மா அதிபர் உட்பட பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆகியோர் இந்த கைதியை வரவேற்பதற்கு விமான நிலையத்துக்கு சென்றிருந்தார்கள்.
பாதாள குழு உறுப்பினர் கெஹல்பத்தரே பத்ம உள்ளிட்ட தரப்பினரை கைது செய்வதற்குரிய சிவப்பு பிடியாணையை இந்த அரசாங்கம் பிறப்பித்ததா அல்லது கடந்த அரசாங்கமா என்பதை வெளிப்படுத்த வேண்டும். இந்த நபர்களை கைது செய்வதற்குரிய சர்வதேச மட்டத்திலான சகல பணிகளையும் கடந்த அரசாங்கமே மேற்கொண்டது.
போதைப்பொருள் குற்றச்சாட்டில் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட நபர் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடன் 2019ஆம் ஆண்டுக்கு பின்னர் செயற்பாட்டு ரீதியிலான அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை. ஆகவே கட்சியுடன் தொடர்பில்லாத நபரை வைத்து சுட்சி மீது குற்றஞ்சாட்டுவது முறையற்றது.
சுங்கத்தில் இருந்து 323 கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டமை பாரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.பிரபாகரனின் ஆயுதங்கள் இந்த கொள்கலன்களில் அடங்கியிருந்ததாக பாராளுமன்றத்தில் பேசப்பட்டது.
இந்த கொள்கலன்கள் தொடர்பில் சர்வதேச புலனாய்வு பிரிவு இலங்கைக்கு அறிக்கை சமர்ப்பித்ததா இல்லையா என்பதை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும். இந்த கொள்கலன் விவகாரத்தில் அரசாங்கம் உண்மையை மூடி மறைக்கிறது என்றார்.
ஐஸ் போதைப்பொருள் உற்பத்தி தொழில்சாலையை ஆரம்பித்துள்ள அநுர அரசு - சாகர காரியவசம் குற்றச்சாட்டு சர்ச்சைக்குரிய 323 கொள்கலன்கள் தொடர்பில் சர்வதேச புலனாய்வு பிரிவு இலங்கைக்கு அறிக்கை சமர்ப்பித்ததா இல்லையா என்பதை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் போதைப்பொருள் விவகாரம் நாட்டின் தற்போதைய பிரச்சினையாக காணப்படுகிறது. ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் அரசாங்கம் நுவரெலியாவில் ஐஸ் போதைப்பொருள் உற்பத்தி கைத்தொழில்சாலையை ஆரம்பித்துள்ளது.கெஹல்பத்தர பத்மே என்ற நபர் அண்மையில் கைது செய்யப்பட்டார். பொலிஸ்மா அதிபர் உட்பட பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆகியோர் இந்த கைதியை வரவேற்பதற்கு விமான நிலையத்துக்கு சென்றிருந்தார்கள்.பாதாள குழு உறுப்பினர் கெஹல்பத்தரே பத்ம உள்ளிட்ட தரப்பினரை கைது செய்வதற்குரிய சிவப்பு பிடியாணையை இந்த அரசாங்கம் பிறப்பித்ததா அல்லது கடந்த அரசாங்கமா என்பதை வெளிப்படுத்த வேண்டும். இந்த நபர்களை கைது செய்வதற்குரிய சர்வதேச மட்டத்திலான சகல பணிகளையும் கடந்த அரசாங்கமே மேற்கொண்டது.போதைப்பொருள் குற்றச்சாட்டில் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட நபர் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடன் 2019ஆம் ஆண்டுக்கு பின்னர் செயற்பாட்டு ரீதியிலான அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை. ஆகவே கட்சியுடன் தொடர்பில்லாத நபரை வைத்து சுட்சி மீது குற்றஞ்சாட்டுவது முறையற்றது.சுங்கத்தில் இருந்து 323 கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டமை பாரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.பிரபாகரனின் ஆயுதங்கள் இந்த கொள்கலன்களில் அடங்கியிருந்ததாக பாராளுமன்றத்தில் பேசப்பட்டது.இந்த கொள்கலன்கள் தொடர்பில் சர்வதேச புலனாய்வு பிரிவு இலங்கைக்கு அறிக்கை சமர்ப்பித்ததா இல்லையா என்பதை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும். இந்த கொள்கலன் விவகாரத்தில் அரசாங்கம் உண்மையை மூடி மறைக்கிறது என்றார்.