• Sep 10 2025

ஏறாவூரில் காணியொன்றில் நான்கு கைக்குண்டுகள் மீட்பு; ஆயுதங்கள் இருக்குமா? அகழ்வுப் பணிகள் முன்னெடுப்பு

shanuja / Sep 9th 2025, 8:50 pm
image

மட்டக்களப்பு – ஏறாவூர் ஓட்டுப்பள்ளி குறுக்கு வீதியில், உள்ள பழைய பாடசாலை ஒன்று அமைந்திருந்த காணியில் இருந்து நான்கு கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.


குறித்த காணியில் ஆயுதங்கள் இருப்பதாக பொலன்னறுவை இராணுவ புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய  ஏறாவூர் நீதிமன்ற நீதிமன்ற உத்தரவை பெற்று குறித்த இடத்தில் இன்று (09) சோதனை மேற்கொள்ளப்பட்டது.


இதன்போது புதைக்கபட்டிருந்த நிலையில் அடைக்கப்பட்ட வாளியொன்றினுள் இருந்து நான்கு கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.


இதனைத்தொடர்ந்து மேலும் ஆயுதங்கள் இருக்குமா என்ற ரீதியில் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டன. 


சம்பவம்  தொடர்பிலான மேலதிக விசாரணைகளை   பொலிஸார்  மேற்கொண்டு வருகின்றனர்.

ஏறாவூரில் காணியொன்றில் நான்கு கைக்குண்டுகள் மீட்பு; ஆயுதங்கள் இருக்குமா அகழ்வுப் பணிகள் முன்னெடுப்பு மட்டக்களப்பு – ஏறாவூர் ஓட்டுப்பள்ளி குறுக்கு வீதியில், உள்ள பழைய பாடசாலை ஒன்று அமைந்திருந்த காணியில் இருந்து நான்கு கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.குறித்த காணியில் ஆயுதங்கள் இருப்பதாக பொலன்னறுவை இராணுவ புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய  ஏறாவூர் நீதிமன்ற நீதிமன்ற உத்தரவை பெற்று குறித்த இடத்தில் இன்று (09) சோதனை மேற்கொள்ளப்பட்டது.இதன்போது புதைக்கபட்டிருந்த நிலையில் அடைக்கப்பட்ட வாளியொன்றினுள் இருந்து நான்கு கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.இதனைத்தொடர்ந்து மேலும் ஆயுதங்கள் இருக்குமா என்ற ரீதியில் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டன. சம்பவம்  தொடர்பிலான மேலதிக விசாரணைகளை   பொலிஸார்  மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement