• Jul 12 2025

ஆணிப் பலகை வீசி மடக்கிப்பிடிக்கப்பட்ட மணல் டிப்பர்! பருத்தித்துறை பொலிசார் அதிரடி

Chithra / Jul 11th 2025, 6:51 pm
image


யாழ்ப்பாணம் - பருத்தித்துறை, வல்லிபுரம் பகுதியில் இருந்து சட்டவிரோதமாக மணலை ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனம், ஆணிகள் அடிக்கப்பட்ட பலகை வீசி மடக்கிப்பிடிக்கப்பட்டதோடு சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 5.00 மணியளவில் இடம்பெற்றதாக பருத்தித்துறை பொலிசார் தெரிவித்தனர். 

வல்லிபுரம் பகுதியில் இருந்து சட்டவிரோத மணல் கடத்தல் இடம்பெற்று வருவதாக கிடைத்த இரகசிய தகவலை அடுத்து பருத்தித்துறை பொலிசார், விசேட அதிரடிப்படையினருடன் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையின் போது டிப்பர் வாகனம் மடக்கிப்பிடிக்கப்பட்டுள்ளது.

மந்திகை சந்தியில் வைத்து மணல் ஏற்றியவாறு பயணித்த குறித்த டிப்பர் ரக வாகனத்தை பொலிசார் மறித்த போது நிற்காது தொடர்ந்து பயணித்த நிலையில், தம்பசிட்டி வீதியில்  ஆணிகள் அடிக்கப்பட்ட பலகை வீசி மடக்கிப் பிடிக்கப்பட்டது.

இதன்போது குறித்த டிப்பர் வாகனத்தில் இருந்த இருவர் தப்பியோடிய நிலையில், வாகன சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பருத்தித்துறை பொலிசார் தெரிவித்துள்ளனர். 

ஆணி பலகையில் சிக்கி டிப்பர் வாகனத்தின் பின் பக்க சக்கரம் சேதமடைந்த நிலையில் அது சீர்செய்யப்பட்ட பின்னர் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றதுடன்,

பருத்தித்துறை நீதிமன்றில் முற்படுத்த பொலிசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.


ஆணிப் பலகை வீசி மடக்கிப்பிடிக்கப்பட்ட மணல் டிப்பர் பருத்தித்துறை பொலிசார் அதிரடி யாழ்ப்பாணம் - பருத்தித்துறை, வல்லிபுரம் பகுதியில் இருந்து சட்டவிரோதமாக மணலை ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனம், ஆணிகள் அடிக்கப்பட்ட பலகை வீசி மடக்கிப்பிடிக்கப்பட்டதோடு சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.இச் சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 5.00 மணியளவில் இடம்பெற்றதாக பருத்தித்துறை பொலிசார் தெரிவித்தனர். வல்லிபுரம் பகுதியில் இருந்து சட்டவிரோத மணல் கடத்தல் இடம்பெற்று வருவதாக கிடைத்த இரகசிய தகவலை அடுத்து பருத்தித்துறை பொலிசார், விசேட அதிரடிப்படையினருடன் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையின் போது டிப்பர் வாகனம் மடக்கிப்பிடிக்கப்பட்டுள்ளது.மந்திகை சந்தியில் வைத்து மணல் ஏற்றியவாறு பயணித்த குறித்த டிப்பர் ரக வாகனத்தை பொலிசார் மறித்த போது நிற்காது தொடர்ந்து பயணித்த நிலையில், தம்பசிட்டி வீதியில்  ஆணிகள் அடிக்கப்பட்ட பலகை வீசி மடக்கிப் பிடிக்கப்பட்டது.இதன்போது குறித்த டிப்பர் வாகனத்தில் இருந்த இருவர் தப்பியோடிய நிலையில், வாகன சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பருத்தித்துறை பொலிசார் தெரிவித்துள்ளனர். ஆணி பலகையில் சிக்கி டிப்பர் வாகனத்தின் பின் பக்க சக்கரம் சேதமடைந்த நிலையில் அது சீர்செய்யப்பட்ட பின்னர் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றதுடன்,பருத்தித்துறை நீதிமன்றில் முற்படுத்த பொலிசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement