கந்தானை பொதுச் சந்தைக்கு அருகில், காரில் இருந்த இருவரை இலக்கு வைத்து மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவர், இன்று காலை குறித்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த சம்பவத்தில் காயமடைந்த இருவரும் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அதில் ஒருவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
மேலும், சம்பவத்தில் காயமடைந்த மற்றைய நபர் மறைந்த முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவின் பிரத்தியேக செயலாளராக பணியாற்றிய சமீரா மனஹார என்பது குறிப்பிடத்தக்கது.
தாக்குதல் நடத்தியவர்களை அடையாளம் கண்டு கைது செய்ய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகப் பொலிஸால் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டில் பலியான உயிர்; முன்னாள் அமைச்சரின் செயலாளர் படுகாயம் இலங்கையில் பயங்கரம் கந்தானையில் இன்று (3) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காயமடைந்து சிகிச்சைப் பெற்றுவந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் படுகாயமடைந்த சமீர மனஹாராவுடன் உடனிருந்த உபாலி குலவர்தன என்பவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கந்தானை பொதுச் சந்தைக்கு அருகில், காரில் இருந்த இருவரை இலக்கு வைத்து மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவர், இன்று காலை குறித்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இந்த சம்பவத்தில் காயமடைந்த இருவரும் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அதில் ஒருவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. மேலும், சம்பவத்தில் காயமடைந்த மற்றைய நபர் மறைந்த முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவின் பிரத்தியேக செயலாளராக பணியாற்றிய சமீரா மனஹார என்பது குறிப்பிடத்தக்கது.தாக்குதல் நடத்தியவர்களை அடையாளம் கண்டு கைது செய்ய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகப் பொலிஸால் தெரிவித்துள்ளனர்.