• Jul 15 2025

திருகோணமலையில் காணியொன்றில் பரவிய தீ கட்டுப்பாட்டுக்குள்

Chithra / Jul 14th 2025, 10:53 am
image



திருகோணமலை - ஜமாலியா பகுதியில் உள்ள காணியொன்றில் நேற்றிரவு தீ விபத்து ஏற்பட்டுள்ளது.  

படவிளக்கம்

காணியில் பரவிய தீயானது சிறிது நேரத்தின் பின்னர் திருகோணமலை நகர சபையின் தீயணைப்பு வாகனத்தின் உதவியுடன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

ஜமாலியாப் பகுதியில் உள்ள காணியொன்றில் காணப்பட்ட குப்பை, கூலங்களுக்கு தீ வைத்தபோது அந்த தீயானது அதிகமாக பரவி சுடர்விட்டு எரிந்துள்ளது.

இந்நிலையில் பிரதேச மக்கள் தீயினை கட்டுப்படுத்த முயற்சித்ததோடு திருகோணமலை நகர சபையின் தீயணைப்பு பிரிவின் உதவியுடன் பெரிய சேதங்கள் ஏற்படாத வகையில் தீப்பரம்பல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை திருகோணமலை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.



திருகோணமலையில் காணியொன்றில் பரவிய தீ கட்டுப்பாட்டுக்குள் திருகோணமலை - ஜமாலியா பகுதியில் உள்ள காணியொன்றில் நேற்றிரவு தீ விபத்து ஏற்பட்டுள்ளது.  படவிளக்கம்காணியில் பரவிய தீயானது சிறிது நேரத்தின் பின்னர் திருகோணமலை நகர சபையின் தீயணைப்பு வாகனத்தின் உதவியுடன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.ஜமாலியாப் பகுதியில் உள்ள காணியொன்றில் காணப்பட்ட குப்பை, கூலங்களுக்கு தீ வைத்தபோது அந்த தீயானது அதிகமாக பரவி சுடர்விட்டு எரிந்துள்ளது.இந்நிலையில் பிரதேச மக்கள் தீயினை கட்டுப்படுத்த முயற்சித்ததோடு திருகோணமலை நகர சபையின் தீயணைப்பு பிரிவின் உதவியுடன் பெரிய சேதங்கள் ஏற்படாத வகையில் தீப்பரம்பல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை திருகோணமலை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement