• Sep 05 2025

பத்மேவின் போதைப்பொருள் தொழிற்சாலையை செயற்படுத்த 2 பாகிஸ்தான் நாட்டவர்கள்

Chithra / Sep 5th 2025, 11:36 am
image


பாதாள உலகக் குழுவின் தலைவர் கெஹெல்பத்தர பத்மேவினால் நுவரெலியாவில் நடத்தப்பட்ட போதைப்பொருள் தொழிற்சாலையை செயற்படுத்துவதில், இரண்டு பாகிஸ்தான் நாட்டவர்கள் ஈடுபட்டிருந்ததாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். 

அதற்கமைய, குறித்த போதைப் பொருள் தொழிற்சாலையை செயற்படுத்துவதற்காக வெளிநாட்டவர்களை, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் குழுவினர் நாட்டிற்கு வரவழைத்துள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார். 

கெஹெல்பத்தர பத்மேவினால் முதலீடு செய்யப்பட்டதாக கூறப்படும் குறித்த போதைப்பொருள் தொழிற்சாலை தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 

அதற்கமைய, குறித்த போதைப் பொருள் தொழிற்சாலைக்கு 40 இலட்சம் ரூபாய் பணத்தை முதலிட்டுள்ளமையை கெஹெல்பத்தர பத்மே ஒப்புக்கொண்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

நுவரெலியாவில் உள்ள வீடொன்றை வாடகைக்கு பெற்றுக் கொண்டுள்ளதுடன், இரண்டாயிரம் கிலோகிராமிற்கும் அதிக இரசாயனங்கள் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால குறிப்பிட்டுள்ளார்.

பத்மேவின் போதைப்பொருள் தொழிற்சாலையை செயற்படுத்த 2 பாகிஸ்தான் நாட்டவர்கள் பாதாள உலகக் குழுவின் தலைவர் கெஹெல்பத்தர பத்மேவினால் நுவரெலியாவில் நடத்தப்பட்ட போதைப்பொருள் தொழிற்சாலையை செயற்படுத்துவதில், இரண்டு பாகிஸ்தான் நாட்டவர்கள் ஈடுபட்டிருந்ததாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். அதற்கமைய, குறித்த போதைப் பொருள் தொழிற்சாலையை செயற்படுத்துவதற்காக வெளிநாட்டவர்களை, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் குழுவினர் நாட்டிற்கு வரவழைத்துள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார். கெஹெல்பத்தர பத்மேவினால் முதலீடு செய்யப்பட்டதாக கூறப்படும் குறித்த போதைப்பொருள் தொழிற்சாலை தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். அதற்கமைய, குறித்த போதைப் பொருள் தொழிற்சாலைக்கு 40 இலட்சம் ரூபாய் பணத்தை முதலிட்டுள்ளமையை கெஹெல்பத்தர பத்மே ஒப்புக்கொண்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். நுவரெலியாவில் உள்ள வீடொன்றை வாடகைக்கு பெற்றுக் கொண்டுள்ளதுடன், இரண்டாயிரம் கிலோகிராமிற்கும் அதிக இரசாயனங்கள் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement