சீகிரியா பொலிஸ் பிரிவிலுள்ள தேக்கு மரத் தோட்டம் ஒன்றில் இருவருக்கிடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பாகியதில் ஒருவர் உயிரிழந்ததுடன் மற்றொருவர் காயமடைந்துள்ளார்.
சம்பவத்தில் பொல்பித்திகம பிரதேசத்தைச் சேர்ந்த 55 வயதுடைய கிருஷ்ணன் ராஜ் என்பவரே உயிரிழந்துள்ளார்.
தம்புள்ள, இனாமலுவ பிரதேவத்திலுள்ள அரசுக்கு சொந்தமான தேக்குமரக்காட்டில் உள்ள மரங்களை ஒப்பந்த அடிப்படையில் அகற்றும் பணியில் ஈடுபட்ட இருவரே இவ்வாறு கைகலப்பில் ஈடுப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த தேக்குமரங்கள் அடர்ந்த பிரதேசத்தில் கொட்டில் ஒன்றை அமைத்து வேலை செய்து வந்த சிலர், இரவு வேளையிலும் தங்கி இருந்துள்ளனர்.
அதே கொட்டிலில் காயமடைந்த நிலையில் இருந்த மற்றுமொருவர் சந்தேகத்தில் கைதுசெய்யப்பட்டு சிகிச்சைக்காக தம்புள்ள வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச் சம்பவம் குறித்து சீகிரியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தேக்கு மரத் தோட்டத்தில் நடந்த கைகலப்பு - ஒருவர் பலி; மற்றொருவர் காயம் சீகிரியா பொலிஸ் பிரிவிலுள்ள தேக்கு மரத் தோட்டம் ஒன்றில் இருவருக்கிடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பாகியதில் ஒருவர் உயிரிழந்ததுடன் மற்றொருவர் காயமடைந்துள்ளார்.சம்பவத்தில் பொல்பித்திகம பிரதேசத்தைச் சேர்ந்த 55 வயதுடைய கிருஷ்ணன் ராஜ் என்பவரே உயிரிழந்துள்ளார். தம்புள்ள, இனாமலுவ பிரதேவத்திலுள்ள அரசுக்கு சொந்தமான தேக்குமரக்காட்டில் உள்ள மரங்களை ஒப்பந்த அடிப்படையில் அகற்றும் பணியில் ஈடுபட்ட இருவரே இவ்வாறு கைகலப்பில் ஈடுப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.குறித்த தேக்குமரங்கள் அடர்ந்த பிரதேசத்தில் கொட்டில் ஒன்றை அமைத்து வேலை செய்து வந்த சிலர், இரவு வேளையிலும் தங்கி இருந்துள்ளனர். அதன்போதே கைகலப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.அதே கொட்டிலில் காயமடைந்த நிலையில் இருந்த மற்றுமொருவர் சந்தேகத்தில் கைதுசெய்யப்பட்டு சிகிச்சைக்காக தம்புள்ள வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இச் சம்பவம் குறித்து சீகிரியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.