கல்வி அமைச்சு, பாடசாலைகளின் நீர்க் கட்டணம் செலுத்துவது தொடர்பான சுற்றறிக்கையின் விதிமுறைகள், 2023 ஜூலை 5ஆம் திகதி அமைச்சரவையின் முடிவுக்கு அமைய, இந்த ஆண்டு ஜனவரி 1 முதல் நடைமுறைக்கு வரும் என அறிவித்துள்ளது.
ஜூலை 7ஆம் திகதி வெளியிடப்பட்ட அறிவிப்பில், அரச பாடசாலைகள் மற்றும் பிரிவெணாக்களில் உள்ள மாணவர், கல்வி மற்றும் கல்விசாரா ஊழியர்களின் மாதாந்த நீர் பயன்பாடு 400 லீட்டர்களாக கணக்கிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தக் கணக்கீட்டின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட பாடசாலையின் மாதாந்த நீர் பயன்பாடு கணக்கிடப்பட்டு, அதற்கு ஏற்ப நீர் கட்டணங்களை அரசாங்கம் செலுத்தும்.
கல்வி அமைச்சு வெளியிட்ட அறிவிப்பில், நிர்ணயிக்கப்பட்ட நீர் பயன்பாட்டை மீறினால், அதிகரித்த நீர் பயன்பாட்டிற்கு ஏற்ப கட்டணங்களை, பாடசாலை அபிவிருத்தி சங்கம் செலுத்த வேண்டும் என்றும், பிரிவெணாக்களாக இருந்தால் ஆண்டு மானியம் அல்லது பிரிவெணா அபிவிருத்தி நிதியிலிருந்து செலுத்த வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
2023 ஜூன் 1 முதல் 2024 டிசம்பர் 30 வரையிலான செலுத்தப்படாத நீர் கட்டணங்களும் இதே முறையில் செலுத்தப்படும் என கல்வி அமைச்சின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், செலுத்தப்படாத தொகையை ஒரே தவணையில் செலுத்துவதில் நிதி சிரமம் இருந்தால், சம்பந்தப்பட்ட நீர் வழங்கல் சபையின் பிராந்திய அலுவலக அதிகாரிகளை சந்தித்து தவணைக் காலம் கோரலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், பாடசாலையின் அதிபர் இல்லம் மற்றும் ஆசிரியர் இல்லங்களுக்கு தனித்தனி நீர் இணைப்புகள் பெறப்பட வேண்டும், மேலும் அந்த இல்லங்களில் வசிக்கும் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட கட்டணங்களை செலுத்த வேண்டும்.
நீச்சல் குளங்கள் போன்ற சிறப்பு நீர் தேவைகளுக்காக பெறப்படும் நீர் வழங்கலுக்கான கட்டணங்கள், அதற்கு தொடர்புடைய வருமானத்திலிருந்து செலுத்தப்பட வேண்டும்.
மேலும், இதுவரை தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையிடமிருந்து எந்தவொரு நீர் இணைப்பையும் பெறாத பாடசாலைகள் அல்லது பிரிவெணாக்களுக்கு, இணைப்பு கட்டணம் ஏதுமின்றி ஒரு பொது நீர் இணைப்பு வழங்கப்படும் என கல்வி அமைச்சு வெளியிட்ட அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாடசாலைகளுக்கான நீர்க்கட்டணம் - கல்வி அமைச்சு விசேட அறிவிப்பு கல்வி அமைச்சு, பாடசாலைகளின் நீர்க் கட்டணம் செலுத்துவது தொடர்பான சுற்றறிக்கையின் விதிமுறைகள், 2023 ஜூலை 5ஆம் திகதி அமைச்சரவையின் முடிவுக்கு அமைய, இந்த ஆண்டு ஜனவரி 1 முதல் நடைமுறைக்கு வரும் என அறிவித்துள்ளது.ஜூலை 7ஆம் திகதி வெளியிடப்பட்ட அறிவிப்பில், அரச பாடசாலைகள் மற்றும் பிரிவெணாக்களில் உள்ள மாணவர், கல்வி மற்றும் கல்விசாரா ஊழியர்களின் மாதாந்த நீர் பயன்பாடு 400 லீட்டர்களாக கணக்கிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அந்தக் கணக்கீட்டின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட பாடசாலையின் மாதாந்த நீர் பயன்பாடு கணக்கிடப்பட்டு, அதற்கு ஏற்ப நீர் கட்டணங்களை அரசாங்கம் செலுத்தும்.கல்வி அமைச்சு வெளியிட்ட அறிவிப்பில், நிர்ணயிக்கப்பட்ட நீர் பயன்பாட்டை மீறினால், அதிகரித்த நீர் பயன்பாட்டிற்கு ஏற்ப கட்டணங்களை, பாடசாலை அபிவிருத்தி சங்கம் செலுத்த வேண்டும் என்றும், பிரிவெணாக்களாக இருந்தால் ஆண்டு மானியம் அல்லது பிரிவெணா அபிவிருத்தி நிதியிலிருந்து செலுத்த வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.2023 ஜூன் 1 முதல் 2024 டிசம்பர் 30 வரையிலான செலுத்தப்படாத நீர் கட்டணங்களும் இதே முறையில் செலுத்தப்படும் என கல்வி அமைச்சின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், செலுத்தப்படாத தொகையை ஒரே தவணையில் செலுத்துவதில் நிதி சிரமம் இருந்தால், சம்பந்தப்பட்ட நீர் வழங்கல் சபையின் பிராந்திய அலுவலக அதிகாரிகளை சந்தித்து தவணைக் காலம் கோரலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன், பாடசாலையின் அதிபர் இல்லம் மற்றும் ஆசிரியர் இல்லங்களுக்கு தனித்தனி நீர் இணைப்புகள் பெறப்பட வேண்டும், மேலும் அந்த இல்லங்களில் வசிக்கும் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட கட்டணங்களை செலுத்த வேண்டும்.நீச்சல் குளங்கள் போன்ற சிறப்பு நீர் தேவைகளுக்காக பெறப்படும் நீர் வழங்கலுக்கான கட்டணங்கள், அதற்கு தொடர்புடைய வருமானத்திலிருந்து செலுத்தப்பட வேண்டும்.மேலும், இதுவரை தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையிடமிருந்து எந்தவொரு நீர் இணைப்பையும் பெறாத பாடசாலைகள் அல்லது பிரிவெணாக்களுக்கு, இணைப்பு கட்டணம் ஏதுமின்றி ஒரு பொது நீர் இணைப்பு வழங்கப்படும் என கல்வி அமைச்சு வெளியிட்ட அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.