• Jul 17 2025

100 அடிக்கு மேல் எழவுள்ள சுனாமி - அமெரிக்கா, கனடாவிற்கு எச்சரிக்கை ! அதிர்ச்சியில் மக்கள்!

shanuja / Jul 17th 2025, 5:55 pm
image

அமரிக்காவின் - அலாஸ்காவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அமெரிக்கா மற்றும் கனடாவிற்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது மக்களை அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது. 


அமெரிக்காவின் அலாஸ்காவில் உள்ள போபோப் தீவில் உள்ள சாண்ட் பாயிண்ட் அருகே சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 7.3 ஆக பதிவாகி உள்ளது. பூமிக்கு அடியில் சுமார் 20 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. 


அலாஸ்காவில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அலாஸ்காவின் கடலோரப் பகுதிகளில் இராட்சத அலைகள் எழுந்துள்ளன. இதனால் அலாஸ்காவைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 


சக்திவாய்நத நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அங்குள்ள பகுதிகளில் இடையிடையே சிறிய நிலநடுக்கங்களும் பதிவாகியதை உணர்ந்ததாக மக்கள் தெரிவித்துள்ளனர். 


இந்த நிலையில் மிக்சிகன் தொழில்நுட்ப பல்கலைக்கழகம், குறித்த நிலநடுக்கம் கடுமையான சேதத்தை ஏற்படுத்தும் என எச்சரித்துள்ளது. இந்த அளவிலான 10 முதல் 15 நிலநடுக்கங்கள் ஒவ்வொரு ஆண்டும் பதிவாகி உள்ளன. 


அலாஸ்காவில் ஏற்பட்ட நிலநடுக்கம் தொடர்பில், அங்குள்ள குடியிருப்பாளர் ஒருவரால் எடுக்கப்பட்ட  காணொளி ஒன்று  இணையத்தில் வைரலாகி வருகின்றது.

அந்தக் காணொளியில்  கட்டடங்கள் குலுங்கும் காட்சிகள், நிலங்கள் அதிரும் காட்சிகள் என்பன தெளிவாகக் காட்டப்பட்டுள்ளன.


சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை அடுத்து அமெரிக்க சுனாமி எச்சரிக்கை மையம், சுனாமி எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் அனைவரும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.

100 அடிக்கு மேல் எழவுள்ள சுனாமி - அமெரிக்கா, கனடாவிற்கு எச்சரிக்கை அதிர்ச்சியில் மக்கள் அமரிக்காவின் - அலாஸ்காவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அமெரிக்கா மற்றும் கனடாவிற்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது மக்களை அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது. அமெரிக்காவின் அலாஸ்காவில் உள்ள போபோப் தீவில் உள்ள சாண்ட் பாயிண்ட் அருகே சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 7.3 ஆக பதிவாகி உள்ளது. பூமிக்கு அடியில் சுமார் 20 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அலாஸ்காவில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அலாஸ்காவின் கடலோரப் பகுதிகளில் இராட்சத அலைகள் எழுந்துள்ளன. இதனால் அலாஸ்காவைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சக்திவாய்நத நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அங்குள்ள பகுதிகளில் இடையிடையே சிறிய நிலநடுக்கங்களும் பதிவாகியதை உணர்ந்ததாக மக்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் மிக்சிகன் தொழில்நுட்ப பல்கலைக்கழகம், குறித்த நிலநடுக்கம் கடுமையான சேதத்தை ஏற்படுத்தும் என எச்சரித்துள்ளது. இந்த அளவிலான 10 முதல் 15 நிலநடுக்கங்கள் ஒவ்வொரு ஆண்டும் பதிவாகி உள்ளன. அலாஸ்காவில் ஏற்பட்ட நிலநடுக்கம் தொடர்பில், அங்குள்ள குடியிருப்பாளர் ஒருவரால் எடுக்கப்பட்ட  காணொளி ஒன்று  இணையத்தில் வைரலாகி வருகின்றது.அந்தக் காணொளியில்  கட்டடங்கள் குலுங்கும் காட்சிகள், நிலங்கள் அதிரும் காட்சிகள் என்பன தெளிவாகக் காட்டப்பட்டுள்ளன.சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை அடுத்து அமெரிக்க சுனாமி எச்சரிக்கை மையம், சுனாமி எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் அனைவரும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement