செம்மணி உட்பட வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள மனிதப் புதைகுழிகள் மற்றும் இனப்படுகொலைகளுக்கு சர்வதேச நீதி கோரிய கையெழுத்துப் போராட்டம் இன்று காலை யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டது.
அதன்படி தென்மராட்சியின் சாவகச்சேரி, கொடிகாமம் நகரங்களில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் ஏற்பாட்டில் கையெழுத்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது சாவகச்சேரி நகரசபை தலைவர் வ.ஶ்ரீபிரகாஸ் மற்றும் பிரதேச சபை தவிசாளர் குகன் ஆகியோர் கையெழுத்து போராட்டத்தை ஆரம்பித்து வைத்தனர்.
சாவகச்சேரி வணிகர் கழகத்தினர், முச்சக்கர வண்டிச் சங்கத்தினர், சந்தை வியாபாரிகள் சங்கத்தினர் பொதுமக்கள் எனப்பலரும் கையெழுத்துப் போராட்டத்தில் பங்கெடுத்தனர்.
இந்நிலையில் இன்றையதினம் பருத்தித்துறை நகர பகுதியின் மத்தியில் காலை 9 மணியளவில் ஆரம்பமாகி இடம்பெற்றது வருகிறது.
கையெழுத்து போராட்டமானது தமிழ் தேசிய கட்சிகள் மற்றும் பொது அமைப்புகளின் ஏற்பாட்டில் இடம்பெற்று வருவதோடு இன்றைய தினம் கையெழுத்து போராட்டத்தில் ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைவர் சி.வேந்தன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன், பருத்தித்துறை நகர சபையினர் உப தவிசாளர்,நகர சபை உறுப்பினர்கள் மற்றும் பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர்கள், பொதுமக்கள், மாணவிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
சர்வதேச நீதி கோரிய யாழ்ப்பாணத்தில் இன்று கையெழுத்து போராட்டம் செம்மணி உட்பட வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள மனிதப் புதைகுழிகள் மற்றும் இனப்படுகொலைகளுக்கு சர்வதேச நீதி கோரிய கையெழுத்துப் போராட்டம் இன்று காலை யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டது.அதன்படி தென்மராட்சியின் சாவகச்சேரி, கொடிகாமம் நகரங்களில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் ஏற்பாட்டில் கையெழுத்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது சாவகச்சேரி நகரசபை தலைவர் வ.ஶ்ரீபிரகாஸ் மற்றும் பிரதேச சபை தவிசாளர் குகன் ஆகியோர் கையெழுத்து போராட்டத்தை ஆரம்பித்து வைத்தனர்.சாவகச்சேரி வணிகர் கழகத்தினர், முச்சக்கர வண்டிச் சங்கத்தினர், சந்தை வியாபாரிகள் சங்கத்தினர் பொதுமக்கள் எனப்பலரும் கையெழுத்துப் போராட்டத்தில் பங்கெடுத்தனர்.இந்நிலையில் இன்றையதினம் பருத்தித்துறை நகர பகுதியின் மத்தியில் காலை 9 மணியளவில் ஆரம்பமாகி இடம்பெற்றது வருகிறது.கையெழுத்து போராட்டமானது தமிழ் தேசிய கட்சிகள் மற்றும் பொது அமைப்புகளின் ஏற்பாட்டில் இடம்பெற்று வருவதோடு இன்றைய தினம் கையெழுத்து போராட்டத்தில் ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைவர் சி.வேந்தன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன், பருத்தித்துறை நகர சபையினர் உப தவிசாளர்,நகர சபை உறுப்பினர்கள் மற்றும் பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர்கள், பொதுமக்கள், மாணவிகள் என பலரும் கலந்து கொண்டனர்.