• Sep 12 2025

பாதாள உலகக்குழு செயற்பாடுகளை ஒழிக்க கோட்டாவிடம் பாடம் கற்க வேண்டும்! திஸாநாயக்க சூளுரை

Chithra / Sep 11th 2025, 10:29 am
image


பாதாள உலகக்குழு செயற்பாடுகளை இல்லாதொழிப்பது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் பாடம் கற்றுக் கொள்ள வேண்டுமென முன்னாள் அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

அண்மையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். 

கோட்டாபய ராஜபக்ச பாதுகாப்புச் செயலாளராக கடமையாற்றிய காலத்தில் அவர் பாதாள உலகக் குழு செயற்பாடுகள் மற்றும் போதைப் பொருளை முற்று முழுதாக இல்லாதொழித்தார்.

பாதாள உலகக் குழு படுகொலைகளை இல்லாதொழிப்பது எவ்வாறு என்பதை கோட்டாபய நாட்டுக்கு செய்து காட்டினார்.

மிகவும் கடுமையான முறையில் அவர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டார்.

போர், பாதாள உலகக் குழு மற்றும் போதைப் பொருள் என்பனவற்றை இல்லாதொழிப்பதில் கோட்டாபய சிறந்த தலைவர் என குறிப்பிட்டுள்ளார்.

எனினும் கோட்டாபய ராஜபக்ச இந்த நாட்டில் மிகவும் தோல்வியடைந்த ஓர் ஜனாதிபதி எனவும் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.  

பாதாள உலகக்குழு செயற்பாடுகளை ஒழிக்க கோட்டாவிடம் பாடம் கற்க வேண்டும் திஸாநாயக்க சூளுரை பாதாள உலகக்குழு செயற்பாடுகளை இல்லாதொழிப்பது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் பாடம் கற்றுக் கொள்ள வேண்டுமென முன்னாள் அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.அண்மையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். கோட்டாபய ராஜபக்ச பாதுகாப்புச் செயலாளராக கடமையாற்றிய காலத்தில் அவர் பாதாள உலகக் குழு செயற்பாடுகள் மற்றும் போதைப் பொருளை முற்று முழுதாக இல்லாதொழித்தார்.பாதாள உலகக் குழு படுகொலைகளை இல்லாதொழிப்பது எவ்வாறு என்பதை கோட்டாபய நாட்டுக்கு செய்து காட்டினார்.மிகவும் கடுமையான முறையில் அவர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டார்.போர், பாதாள உலகக் குழு மற்றும் போதைப் பொருள் என்பனவற்றை இல்லாதொழிப்பதில் கோட்டாபய சிறந்த தலைவர் என குறிப்பிட்டுள்ளார்.எனினும் கோட்டாபய ராஜபக்ச இந்த நாட்டில் மிகவும் தோல்வியடைந்த ஓர் ஜனாதிபதி எனவும் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.  

Advertisement

Advertisement

Advertisement