• Sep 12 2025

கொழும்பு வீட்டிலிருந்து வெளியேறிய மஹிந்தவுக்கு; தங்காலையில் பலத்த வரவேற்பு!

shanuja / Sep 11th 2025, 11:40 pm
image

உத்தியோகபூர்வ  இல்லத்திலிருந்து வௌியேறிய மஹிந்த ராஜபக்ஷவுக்கு தங்காலையில் பலத்த வரவேற்பு வழங்கப்பட்டுள்ளது. 


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது மனைவி ஷிரந்த ராஜபக்ஷவுடன்  இன்று பிற்பகல் கொழும்பு விஜயரமாவில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து வெளியேறியுள்ளார்.

 

மஹிந்த வெளியேறிய போது அந்தப் பகுதி முழுவதும் பரபரப்பு நிலை உருவாகியது.


உத்தியோகபூர்வ இல்லமான விஜேராம இல்லத்தில் இருந்து வெளியேறிய முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தங்காலையில் உள்ள கார்ல்டன் இல்லத்திற்குச்  சென்றுள்ளார்.


அங்கு சென்ற வேளையே அவருக்க பலத்த வரவேற்பு அளிக்கப்பட்டது. அவரது ஆதரவாளர்கள் பலர் ஒன்று கூடி மஹிந்தவை வரவேற்றனர். 


இதேவேளை தான் வெளியேறுவது குறித்து ஊடகங்களிடம் தெரிவித்த மஹிந்த, 

'போகச் சொன்னார்கள் போகின்றோம்.  ஆனால், அரசியலில் இருந்து போகமாட்டோம். அனுர செய்தது சரி, நாங்கள் தான் தவறு செய்துவிட்டோம்' என தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கொழும்பு வீட்டிலிருந்து வெளியேறிய மஹிந்தவுக்கு; தங்காலையில் பலத்த வரவேற்பு உத்தியோகபூர்வ  இல்லத்திலிருந்து வௌியேறிய மஹிந்த ராஜபக்ஷவுக்கு தங்காலையில் பலத்த வரவேற்பு வழங்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது மனைவி ஷிரந்த ராஜபக்ஷவுடன்  இன்று பிற்பகல் கொழும்பு விஜயரமாவில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து வெளியேறியுள்ளார். மஹிந்த வெளியேறிய போது அந்தப் பகுதி முழுவதும் பரபரப்பு நிலை உருவாகியது.உத்தியோகபூர்வ இல்லமான விஜேராம இல்லத்தில் இருந்து வெளியேறிய முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தங்காலையில் உள்ள கார்ல்டன் இல்லத்திற்குச்  சென்றுள்ளார்.அங்கு சென்ற வேளையே அவருக்க பலத்த வரவேற்பு அளிக்கப்பட்டது. அவரது ஆதரவாளர்கள் பலர் ஒன்று கூடி மஹிந்தவை வரவேற்றனர். இதேவேளை தான் வெளியேறுவது குறித்து ஊடகங்களிடம் தெரிவித்த மஹிந்த, 'போகச் சொன்னார்கள் போகின்றோம்.  ஆனால், அரசியலில் இருந்து போகமாட்டோம். அனுர செய்தது சரி, நாங்கள் தான் தவறு செய்துவிட்டோம்' என தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement