• May 25 2025

செயலமர்வுக்கு அறிவிக்க சென்ற ஆசிரியர் - அதிபருக்கும் ஆசிரியருக்கும் மாணிவியின் சகோதரன் செய்த கொடூரச்செயல்

Thansita / May 24th 2025, 11:04 am
image

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள ஆலையடிவேம்பு பிரதேசத்தில் விசேட பயிற்சி செயலமர்வு தொடர்பாக பாடசாலை மாணவி ஒருவருக்கு தெரிவிக்க அவரின் வீட்டுக்கு சென்ற ஆசிரியர் மற்றும் அதிபர் வாள்வெட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

தாக்குதலை மேற்கொண்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அக்கபைரப்பற்று பொலிசார் தெரிவித்தனர்

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவது

குறித்த பிரதேசத்திலுள்ள பாடசாலையில் கல்வி கற்றுவரும் க.பொ.த.சாதாரண தர  மாணவர்களுக்கு விசேட பயிற்சி செயலமர்வு ஒன்று தம்பட்டை பிரதேசத்தில் இன்று சனிக்கிழமை இடம்பெறவுள்ளதற்கு செல்வதற்கு மாணவர்களை ஸ்ரீ இராமகிருஷ்ணா தேசிய பாடசாலைக்கு முன்னாள் ஒன்று கூடுமாறு அதிபரின் உத்தரவுக்கமைய மாணவர்களின் வீட்டிற்கு சென்று அறிவிப்பதற்காக சம்பவதினமான நேற்று மாலை குறித்த ஆசிரியர் மாணவி ஒருவரின் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார்

இந்த நிலையில் குறித்த மாணவிக்கு அறிவித்துவிட்டு அங்கிருந்து வெளியேற முற்பட்டார்

இதன்போது  வீட்டில் சத்தம் கேட்ட நிலையில் வீட்டில் இருந்து வெளியில் வந்த மாணவியின் சகோதரன் ஆசிரியரை வாளால் வெட்டி தாக்கியதுடன் மோட்டார் சைக்கிளை அடித்து உடைத்ததையடுத்து அசிரியர் தனக்கு நேர்ந்த கதியை அதிபருக்கு தெரிவித்துள்ளார்

இதனையடுத்து அதிபர் அங்கு சென்று ஆசிரியரை காப்பாற்ற முற்பட்போது அவர் மீதும் வாள்வெட்டு தாக்குதல் நடத்தியதுடன் அவரது மோட்டார் சைக்கிளும் அடித்து உடைக்கப்பட்டது

இதனையடுத்து வாள்வெட்டு தாக்குதலில் படுகாயமடைந்த ஆசிரியர் இஅதிபர் ஆகிய இருவரையும் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது

இந்த தாக்குதலை மேற்கொண்டவர் ஒருவரை கைது செய்துள்ளதாகவும் அவர் மதுபோதையில் இருந்துள்ளதாகவும் இவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்

இச் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

செயலமர்வுக்கு அறிவிக்க சென்ற ஆசிரியர் - அதிபருக்கும் ஆசிரியருக்கும் மாணிவியின் சகோதரன் செய்த கொடூரச்செயல் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள ஆலையடிவேம்பு பிரதேசத்தில் விசேட பயிற்சி செயலமர்வு தொடர்பாக பாடசாலை மாணவி ஒருவருக்கு தெரிவிக்க அவரின் வீட்டுக்கு சென்ற ஆசிரியர் மற்றும் அதிபர் வாள்வெட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்தாக்குதலை மேற்கொண்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அக்கபைரப்பற்று பொலிசார் தெரிவித்தனர்இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதுகுறித்த பிரதேசத்திலுள்ள பாடசாலையில் கல்வி கற்றுவரும் க.பொ.த.சாதாரண தர  மாணவர்களுக்கு விசேட பயிற்சி செயலமர்வு ஒன்று தம்பட்டை பிரதேசத்தில் இன்று சனிக்கிழமை இடம்பெறவுள்ளதற்கு செல்வதற்கு மாணவர்களை ஸ்ரீ இராமகிருஷ்ணா தேசிய பாடசாலைக்கு முன்னாள் ஒன்று கூடுமாறு அதிபரின் உத்தரவுக்கமைய மாணவர்களின் வீட்டிற்கு சென்று அறிவிப்பதற்காக சம்பவதினமான நேற்று மாலை குறித்த ஆசிரியர் மாணவி ஒருவரின் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார்இந்த நிலையில் குறித்த மாணவிக்கு அறிவித்துவிட்டு அங்கிருந்து வெளியேற முற்பட்டார்இதன்போது  வீட்டில் சத்தம் கேட்ட நிலையில் வீட்டில் இருந்து வெளியில் வந்த மாணவியின் சகோதரன் ஆசிரியரை வாளால் வெட்டி தாக்கியதுடன் மோட்டார் சைக்கிளை அடித்து உடைத்ததையடுத்து அசிரியர் தனக்கு நேர்ந்த கதியை அதிபருக்கு தெரிவித்துள்ளார்இதனையடுத்து அதிபர் அங்கு சென்று ஆசிரியரை காப்பாற்ற முற்பட்போது அவர் மீதும் வாள்வெட்டு தாக்குதல் நடத்தியதுடன் அவரது மோட்டார் சைக்கிளும் அடித்து உடைக்கப்பட்டதுஇதனையடுத்து வாள்வெட்டு தாக்குதலில் படுகாயமடைந்த ஆசிரியர் இஅதிபர் ஆகிய இருவரையும் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதுஇந்த தாக்குதலை மேற்கொண்டவர் ஒருவரை கைது செய்துள்ளதாகவும் அவர் மதுபோதையில் இருந்துள்ளதாகவும் இவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்இச் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement