• Sep 04 2025

18 புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகளை நியமித்தார் ஜனாதிபதி!

Chithra / Sep 4th 2025, 9:28 am
image

 

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க 18 புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகளை நியமித்துள்ளார்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க,  நேற்று பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகளுக்கு நியமனக் கடிதங்களை  வழங்கினார்.

விசேட தர நீதித்துறை அதிகாரிகள்  17 பேரும் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களத்தில் பணியாற்றும் சிரேஷ்ட அரசதரப்பு சட்டத்தரணி ஒருவரும் இவ்வாறு மேல் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 111 ஆவது அரசியலமைப்பின் (2) ஆவது உப பிரிவின்படி ஜனாதிபதியினால்  இந்த நியமனங்கள் வழங்கப்பட்டன.

18 புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகளை நியமித்தார் ஜனாதிபதி  ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க 18 புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகளை நியமித்துள்ளார்.ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க,  நேற்று பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகளுக்கு நியமனக் கடிதங்களை  வழங்கினார்.விசேட தர நீதித்துறை அதிகாரிகள்  17 பேரும் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களத்தில் பணியாற்றும் சிரேஷ்ட அரசதரப்பு சட்டத்தரணி ஒருவரும் இவ்வாறு மேல் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 111 ஆவது அரசியலமைப்பின் (2) ஆவது உப பிரிவின்படி ஜனாதிபதியினால்  இந்த நியமனங்கள் வழங்கப்பட்டன.

Advertisement

Advertisement

Advertisement