• Sep 03 2025

குழந்தை விடுதிக்குள் சுற்றித்திரிந்த எலிகள் ; பிறந்த சிசுக்களை கடித்துக்குதறிய கொடூரம்!

shanuja / Sep 3rd 2025, 1:07 pm
image

மருத்துவமனையின் குழந்தை விடுதிக்குள் சுற்றித் திரிந்த எலிகள், விடுதிக்குள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட இரண்டு சிசுக்களைக் கடித்துத் தாக்கியுள்ளது. 


இந்தக் கொடூர சம்பவம் தமிழகத்தின் மத்திய பிரதேச மாநிலம் இந்தூரிலுள்ள அரச மருத்துவமனையில் இடம்பெற்றுள்ளது. 


இந்தூரிலுள்ள பிரபலமான குறித்த மருத்துவமனையில் எலித்தொல்லை அதிகரித்துள்ளதாக தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்தன. 


இந்த நிலையில் மருத்துவமனையின் குழந்தைகள்  நல விடுதிக்குள் பிறந்த இரண்டு பச்சிளம் சிசுக்கள்  சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தனர். 


இதன்போது விடுதிக்குள் தங்கியிருந்த எலிகள் வெளியே வந்து பச்சிளம்  சிசுக்களைக் கடித்துத் தாக்கியுள்ளது. 


சிசுக்களின் பிஞ்சுக் கை விரல்கள் மற்றும் காதுகளை  எலிகள் கடித்து குதறின. வலியைத் தாங்கமால் சிசுக்கள் கதறி துடித்தனர். 


எலிகளின் தாக்குதலில் பலத்த காயமடைந்த சிசுக்களுக்கு மருத்துவமனையில்  தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


சிசுக்களைப் பராமரிக்கும் விடுதிக்குள் இத்தகைய செயல் இடம்பெற்றதால் மருத்துவமனை வட்டாரத்தின் மீது பல விமர்சனங்கள் எழுந்துள்ளன.

குழந்தை விடுதிக்குள் சுற்றித்திரிந்த எலிகள் ; பிறந்த சிசுக்களை கடித்துக்குதறிய கொடூரம் மருத்துவமனையின் குழந்தை விடுதிக்குள் சுற்றித் திரிந்த எலிகள், விடுதிக்குள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட இரண்டு சிசுக்களைக் கடித்துத் தாக்கியுள்ளது. இந்தக் கொடூர சம்பவம் தமிழகத்தின் மத்திய பிரதேச மாநிலம் இந்தூரிலுள்ள அரச மருத்துவமனையில் இடம்பெற்றுள்ளது. இந்தூரிலுள்ள பிரபலமான குறித்த மருத்துவமனையில் எலித்தொல்லை அதிகரித்துள்ளதாக தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்த நிலையில் மருத்துவமனையின் குழந்தைகள்  நல விடுதிக்குள் பிறந்த இரண்டு பச்சிளம் சிசுக்கள்  சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தனர். இதன்போது விடுதிக்குள் தங்கியிருந்த எலிகள் வெளியே வந்து பச்சிளம்  சிசுக்களைக் கடித்துத் தாக்கியுள்ளது. சிசுக்களின் பிஞ்சுக் கை விரல்கள் மற்றும் காதுகளை  எலிகள் கடித்து குதறின. வலியைத் தாங்கமால் சிசுக்கள் கதறி துடித்தனர். எலிகளின் தாக்குதலில் பலத்த காயமடைந்த சிசுக்களுக்கு மருத்துவமனையில்  தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.சிசுக்களைப் பராமரிக்கும் விடுதிக்குள் இத்தகைய செயல் இடம்பெற்றதால் மருத்துவமனை வட்டாரத்தின் மீது பல விமர்சனங்கள் எழுந்துள்ளன.

Advertisement

Advertisement

Advertisement