• Sep 03 2025

சர்வதேச நீதியின் நிராகரிப்பு இனவாத மனோநிலையின் வெளிப்பாடு - சபா குகதாஸ் தெரிவிப்பு!

shanuja / Sep 3rd 2025, 1:04 pm
image

அநுர அரசாங்கம் கடந்தகால அரசுகளைப் போல பாதிக்கப்பட்ட மக்களுக்கான சர்வதேச நீதிப் பொறிமுறையை நிராகரிக்கிறது என்றால் அது பச்சை இனவாதம் என வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.


இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,


இனவாதம் அற்ற நாட்டை உருவாக்கிறோம் என மேடைப் பேச்சுப் பேசும் அநுர அரசாங்கம் சக பாதிக்கப்பட்ட இனத்திற்கான உள்நாட்டு நீதி 16 ஆண்டுகளாக ஏன் கானல் நீராகியது என்ற உண்மையை அறிந்தும் கடந்தகால ஆட்சியாளர்கள் போன்று நாம் இராணுவத்தை காட்டிக் கொடுக்கமாட்டோம் பாதுகாப்போம் என கூறிக் கொண்டு உள் நாட்டில் நீதி வழங்குவோம் என்பது ஏமாற்று நாடகம்.


மனிதப் புதைகுழிகள் வலிந்து காணாமல் ஆக்கப்டோருக்கான மிகப் பெரும் ஆதாரமும் சாட்சியமும் இதற்கு உள் நாட்டில் நீதி என்பது அநுர அரசின் பித்தலாட்டம்.


1996 ஆம் ஆண்டு வடக்கில் 90% மின்சாரம் இல்லை யுத்தம் நடந்து கொண்டு இருக்கிறது பெரும் பொருளாதார நெருக்கடிக்குள் இராணுவ மற்றும் விமானப்படைகளின் கண்மூடித்தனமான தாக்குதல்கள் இதற்குள்  கிறிக்கட் பார்த்தனர் என புதிய உருட்டு.


பாண் கேட்டவனுக்கு கேக் சாப்பிடு என்பது போல சொந்த நிலத்திற்கு குடியேற முடியாது இராணுவ ஆக்கிரமிப்பில் இருக்கும் நிலங்களை விடுவிக்குமாறு போராடிய மக்களை விரட்டிவிட்டு அடிப்படை உரிமையை கோரி போராடும் மக்களுக்கு தீர்வு வழங்காது விளையாட்டு மைதானத்திற்கு அடிக்கல்லு நாட்டுவது அவசியமா?


அடிப்படைப் பிரச்சினைகளுக்கும் தேசிய இனப்பிரச்சினைக்கும் தீர்வு காண அநுர அரசாங்கம் தயார் இல்லை என்றால் கடந்த கால ஆட்சியாளர்களின் இனவாத ஆட்சியாக தோல்வியில் தான் முடிவடையும் வாக்களித்த மக்களுக்கு மீண்டும் ஒரு ஏமாற்றம் காத்திருக்கத்தான் செய்யும் என தெரிவித்தார்.

சர்வதேச நீதியின் நிராகரிப்பு இனவாத மனோநிலையின் வெளிப்பாடு - சபா குகதாஸ் தெரிவிப்பு அநுர அரசாங்கம் கடந்தகால அரசுகளைப் போல பாதிக்கப்பட்ட மக்களுக்கான சர்வதேச நீதிப் பொறிமுறையை நிராகரிக்கிறது என்றால் அது பச்சை இனவாதம் என வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,இனவாதம் அற்ற நாட்டை உருவாக்கிறோம் என மேடைப் பேச்சுப் பேசும் அநுர அரசாங்கம் சக பாதிக்கப்பட்ட இனத்திற்கான உள்நாட்டு நீதி 16 ஆண்டுகளாக ஏன் கானல் நீராகியது என்ற உண்மையை அறிந்தும் கடந்தகால ஆட்சியாளர்கள் போன்று நாம் இராணுவத்தை காட்டிக் கொடுக்கமாட்டோம் பாதுகாப்போம் என கூறிக் கொண்டு உள் நாட்டில் நீதி வழங்குவோம் என்பது ஏமாற்று நாடகம்.மனிதப் புதைகுழிகள் வலிந்து காணாமல் ஆக்கப்டோருக்கான மிகப் பெரும் ஆதாரமும் சாட்சியமும் இதற்கு உள் நாட்டில் நீதி என்பது அநுர அரசின் பித்தலாட்டம்.1996 ஆம் ஆண்டு வடக்கில் 90% மின்சாரம் இல்லை யுத்தம் நடந்து கொண்டு இருக்கிறது பெரும் பொருளாதார நெருக்கடிக்குள் இராணுவ மற்றும் விமானப்படைகளின் கண்மூடித்தனமான தாக்குதல்கள் இதற்குள்  கிறிக்கட் பார்த்தனர் என புதிய உருட்டு.பாண் கேட்டவனுக்கு கேக் சாப்பிடு என்பது போல சொந்த நிலத்திற்கு குடியேற முடியாது இராணுவ ஆக்கிரமிப்பில் இருக்கும் நிலங்களை விடுவிக்குமாறு போராடிய மக்களை விரட்டிவிட்டு அடிப்படை உரிமையை கோரி போராடும் மக்களுக்கு தீர்வு வழங்காது விளையாட்டு மைதானத்திற்கு அடிக்கல்லு நாட்டுவது அவசியமாஅடிப்படைப் பிரச்சினைகளுக்கும் தேசிய இனப்பிரச்சினைக்கும் தீர்வு காண அநுர அரசாங்கம் தயார் இல்லை என்றால் கடந்த கால ஆட்சியாளர்களின் இனவாத ஆட்சியாக தோல்வியில் தான் முடிவடையும் வாக்களித்த மக்களுக்கு மீண்டும் ஒரு ஏமாற்றம் காத்திருக்கத்தான் செய்யும் என தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement