AI தொழில்நுட்பமான ChatGPT யுடன் உரையாடிய நபர் ஒருவர் தாயைக் கொலைசெய்து தன்னுயிரையும் மாய்த்த சம்பவம் பதிவாகியுள்ளது.
இந்தச் சம்பவம் அமெரிக்காவில் பதிவாகியுள்ளது.
Paranoia என்ற உளவியல் நோயால் பாதிக்கப்பட்ட எரிக் (56) என்ற நபரே தாயையும் கொலை செய்து தன்னுயிரையும் மாய்த்துள்ளார்.
குறித்த ChatGPT க்கு பாபி எனப் பெயரிட்டு தினமும் அவர் பேசி வந்துள்ளார். இந்த நிலையில் ChatGPT யுடன் உரையாடிய போது ChatGPT தெரிவிக்கையில், உன் தாய் ஒரு பேய். மருந்து கொடுத்து உன்னைக் கொல்ல முயற்சிக்கிறார்.” எனக் கூறியுள்ளது.
ChatGPT க்கு அடிமையான குறித்த நபர் ChatGPT கூறிய வார்த்தைகளை நம்பி தனது தாயைக் கொலை செய்துள்ளார். பின்னர் தனது உயிரையும் அவர் மாய்த்துள்ளார்.
இதேவேளை இதற்கு முன்னர் அண்மையில் கூட அமெரிக்காவில் ChatGPT யால் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். அது தொடர்பில் OpenAI நிறுவனத்திற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த நிலையிலேயே மீண்டும் ChatGPT யால் இவ்வாறானதொரு சம்பவம் நிகழ்ந்தேறியுள்ளது. இது குறித்து OpenAI நிறுவனமும் கவலை வெளியிட்டுள்ளது.
AI தொழில்நுட்பம் பல்வேறு புது முயற்சிகளை உருவாக்கும் என்ற அடிப்படையில் அறிமுகமானதொரு தொழில்நுட்பமாகும். எனினும் தற்போது பல்வேறுபட்ட அசம்பாவிதங்களுக்கு உறுதுணையாகவே AI தொழில்நுட்பம் செயற்படுத்தப்பட்டு வருகின்றது.
ChatGPT யுடன் உரையாடிய நபர் ; தாயைக் கொலை செய்து தன்னுயிரையும் மாய்ப்பு AI தொழில்நுட்பமான ChatGPT யுடன் உரையாடிய நபர் ஒருவர் தாயைக் கொலைசெய்து தன்னுயிரையும் மாய்த்த சம்பவம் பதிவாகியுள்ளது.இந்தச் சம்பவம் அமெரிக்காவில் பதிவாகியுள்ளது. Paranoia என்ற உளவியல் நோயால் பாதிக்கப்பட்ட எரிக் (56) என்ற நபரே தாயையும் கொலை செய்து தன்னுயிரையும் மாய்த்துள்ளார். குறித்த ChatGPT க்கு பாபி எனப் பெயரிட்டு தினமும் அவர் பேசி வந்துள்ளார். இந்த நிலையில் ChatGPT யுடன் உரையாடிய போது ChatGPT தெரிவிக்கையில், உன் தாய் ஒரு பேய். மருந்து கொடுத்து உன்னைக் கொல்ல முயற்சிக்கிறார்.” எனக் கூறியுள்ளது. ChatGPT க்கு அடிமையான குறித்த நபர் ChatGPT கூறிய வார்த்தைகளை நம்பி தனது தாயைக் கொலை செய்துள்ளார். பின்னர் தனது உயிரையும் அவர் மாய்த்துள்ளார். இதேவேளை இதற்கு முன்னர் அண்மையில் கூட அமெரிக்காவில் ChatGPT யால் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். அது தொடர்பில் OpenAI நிறுவனத்திற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையிலேயே மீண்டும் ChatGPT யால் இவ்வாறானதொரு சம்பவம் நிகழ்ந்தேறியுள்ளது. இது குறித்து OpenAI நிறுவனமும் கவலை வெளியிட்டுள்ளது. AI தொழில்நுட்பம் பல்வேறு புது முயற்சிகளை உருவாக்கும் என்ற அடிப்படையில் அறிமுகமானதொரு தொழில்நுட்பமாகும். எனினும் தற்போது பல்வேறுபட்ட அசம்பாவிதங்களுக்கு உறுதுணையாகவே AI தொழில்நுட்பம் செயற்படுத்தப்பட்டு வருகின்றது.