கொழும்பு தேசிய வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்த சிசுவொன்றின் உடல் காணாமல் போயுள்ளதாக மருதானை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆகஸ்ட் முதலாம் திகதியன்று தெமட்டகொட பொலிஸ் பிரிவின் மாளிகாவத்தை ரயில்வே பாதையில் நிறுத்தப்பட்டிருந்த ரயிலின் கழிவறையில் குழந்தையின் உடல் கண்டெடுக்கப்பட்டது.
இந்த விவகாரம் தொடர்பில் தெமட்டகொட பொலிஸார் விசாரணை நடத்தி, நீதவானின் உத்தரவின் பேரில் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் சிசுவின் உடலை ஒப்படைத்துள்ளனர்.
குறித்த உடலம் தொடர்பில் கடந்த 29 ஆம் மற்றும் 31 ஆம் திகதிகளில் மரண பரிசோதனை நடத்துவதற்காக தெமட்டகொடை பொலிஸ் நிலைய அதிகாரிகள் கொழும்பு தேசிய மருத்துவமனை பிணவறைக்குச் சென்று, குழந்தையின் உடலம் தொடர்பில் விசாரித்தபோது, அதன் உடலம் அங்கிருந்து காணாமல் போயுள்ளமை தெரியவந்துள்ளது.
எனவே இது தொடர்பில் மருதானை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்த சிசுவின் உடல் மாயம்; கொழும்பு தேசிய மருத்துவமனையில் சம்பவம் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்த சிசுவொன்றின் உடல் காணாமல் போயுள்ளதாக மருதானை பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த ஆகஸ்ட் முதலாம் திகதியன்று தெமட்டகொட பொலிஸ் பிரிவின் மாளிகாவத்தை ரயில்வே பாதையில் நிறுத்தப்பட்டிருந்த ரயிலின் கழிவறையில் குழந்தையின் உடல் கண்டெடுக்கப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பில் தெமட்டகொட பொலிஸார் விசாரணை நடத்தி, நீதவானின் உத்தரவின் பேரில் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் சிசுவின் உடலை ஒப்படைத்துள்ளனர். குறித்த உடலம் தொடர்பில் கடந்த 29 ஆம் மற்றும் 31 ஆம் திகதிகளில் மரண பரிசோதனை நடத்துவதற்காக தெமட்டகொடை பொலிஸ் நிலைய அதிகாரிகள் கொழும்பு தேசிய மருத்துவமனை பிணவறைக்குச் சென்று, குழந்தையின் உடலம் தொடர்பில் விசாரித்தபோது, அதன் உடலம் அங்கிருந்து காணாமல் போயுள்ளமை தெரியவந்துள்ளது.எனவே இது தொடர்பில் மருதானை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.