• Sep 04 2025

மீண்டும் வெளிப்பட ஆரம்பித்துள்ள ஜே.வி.பி.யின் பழைய முகம்! பிரதமர் ஏற்றுக்கொள்கின்றாரா? -எதிர்தரப்பு கேள்வி

Chithra / Sep 4th 2025, 10:24 am
image

தேசிய மக்கள் சக்தியின் பாதாள உலகக் குழுவினர் அரசியல் கட்சி அலுவலகங்களுக்குச் சென்று பலவந்தமாக அவர்களது சொத்துக்களை கைப்பற்றுகின்றனர் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி தெரிவித்தார். 

நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

ஜே.வி.பி.யின் பழைய முகம் தற்போது மீண்டும் வெளிப்பட ஆரம்பித்துள்ளது. ஜே.வி.பி. என்ற கட்சியை மறைத்து தேசிய மக்கள் சக்தி என்ற போர்வையை நம்பியே இளம் தலைமுறையினர் இந்த அரசாங்கத்துக்கு வாக்களித்தனர். 

அத்தோடு புதிய அரசியல் கலாசாரமொன்று உருவாக்கப்படும் என்றும் நம்பினர். ஆனால் அந்த நம்பிக்கைகளுக்கு அப்பால் ஜே.வி.பி. மிகவும் பாரதூரமான செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகிறது.

வன்முறையை மீண்டும் கைகளில் எடுத்துள்ளனர். பிரதமர் ஹரிணி அமரசூரிய இதனை ஏற்றுக் கொள்கின்றாரா? 

நாட்டில் ஜனநாயகத்தை இல்லாதொழிப்பதற்கு பாதாள உலகக் குழுவினர் பயன்படுத்தப்படுகின்றனர். தேசிய மக்கள் சக்தியின் பாதாள உலகக் குழுவினர் அரசியல் கட்சி அலுவலகங்களுக்குச் சென்று பலவந்தமாக அவர்களது சொத்துக்களை கைப்பற்றுகின்றனர்.

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து இந்த அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றார்.

மீண்டும் வெளிப்பட ஆரம்பித்துள்ள ஜே.வி.பி.யின் பழைய முகம் பிரதமர் ஏற்றுக்கொள்கின்றாரா -எதிர்தரப்பு கேள்வி தேசிய மக்கள் சக்தியின் பாதாள உலகக் குழுவினர் அரசியல் கட்சி அலுவலகங்களுக்குச் சென்று பலவந்தமாக அவர்களது சொத்துக்களை கைப்பற்றுகின்றனர் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி தெரிவித்தார். நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,ஜே.வி.பி.யின் பழைய முகம் தற்போது மீண்டும் வெளிப்பட ஆரம்பித்துள்ளது. ஜே.வி.பி. என்ற கட்சியை மறைத்து தேசிய மக்கள் சக்தி என்ற போர்வையை நம்பியே இளம் தலைமுறையினர் இந்த அரசாங்கத்துக்கு வாக்களித்தனர். அத்தோடு புதிய அரசியல் கலாசாரமொன்று உருவாக்கப்படும் என்றும் நம்பினர். ஆனால் அந்த நம்பிக்கைகளுக்கு அப்பால் ஜே.வி.பி. மிகவும் பாரதூரமான செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகிறது.வன்முறையை மீண்டும் கைகளில் எடுத்துள்ளனர். பிரதமர் ஹரிணி அமரசூரிய இதனை ஏற்றுக் கொள்கின்றாரா நாட்டில் ஜனநாயகத்தை இல்லாதொழிப்பதற்கு பாதாள உலகக் குழுவினர் பயன்படுத்தப்படுகின்றனர். தேசிய மக்கள் சக்தியின் பாதாள உலகக் குழுவினர் அரசியல் கட்சி அலுவலகங்களுக்குச் சென்று பலவந்தமாக அவர்களது சொத்துக்களை கைப்பற்றுகின்றனர்.எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து இந்த அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றார்.

Advertisement

Advertisement

Advertisement