முல்லைத்தீவு, முத்தையன்கட்டு இராணுவ முகாமிற்கு சென்ற இளைஞர்களில் ஒருவர் கொல்லப்பட்டமை இராணுவத்தின் தொடர் அடக்குமுறையை வெளிப்படுத்துவதாக சிறிரெலோ கட்சியின் செயலாளர் நாயகம் ப.உதயராசா தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு, முத்தையன்கட்டு பகுதியில் இராணுவ முகாமுக்குள் சென்ற இளைஞர்களில் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டமை தொடர்பில் அவர் இன்று (09.08) வெயிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
முல்லைத்தீவு, முத்தையன் கட்டுப் பகுதியில் வசித்து வரும் இளம் குடும்பஸ்தர் ஒருவர் தனது பொருளாதார நிலை காரணமாக வீடு அமைப்பதற்கான தகரத்தை பெறுவதற்காக இராணுவத்தினரின் அழைப்பின் பேரில் இராணுவ முகாமற்கு வேறு சிலருடன் சென்றுள்ளார்.
குறித்த பகுதியில் நின்ற இராணுவத்தினர் குறித்த இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் அவர்கள் அச்சத்தின் காரணமாக ஓடியுள்ளதுடன், ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த காட்டுமிராண்டித் தனமான சம்பவத்தை வன்மையாக கண்டிப்பதுடன, இது தொடர்பில் நீதியான விசாரணை நடத்தப்பட்டு குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய இராணுவத்தினர் தண்டிக்கப்பட வேண்டும்.
இச் செயற்பாடானது இராணுவத்தின் மனநிலையில் யுத்தம் முடிவடைந்து 16 வருடங்கள் கடந்தும் மாற்றம் ஏற்படவில்லை என்பதை வெளிபடுத்துவதுடன், அடக்குமுறை ஆட்சி தமிழர் தாயகப் பிரதேசத்தில் தொடர்ந்தும் இடம்பெறுவதை வெளிபடுத்தி நிற்கின்றது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முத்தையன்கட்டில் இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டமை இராணுவத்தின் தொடர் அடக்குமுறையை வெளிப்படுத்துகின்றது - சிறிரெலோ கட்சியின் செயலாளர் நாயகம் முல்லைத்தீவு, முத்தையன்கட்டு இராணுவ முகாமிற்கு சென்ற இளைஞர்களில் ஒருவர் கொல்லப்பட்டமை இராணுவத்தின் தொடர் அடக்குமுறையை வெளிப்படுத்துவதாக சிறிரெலோ கட்சியின் செயலாளர் நாயகம் ப.உதயராசா தெரிவித்துள்ளார்.முல்லைத்தீவு, முத்தையன்கட்டு பகுதியில் இராணுவ முகாமுக்குள் சென்ற இளைஞர்களில் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டமை தொடர்பில் அவர் இன்று (09.08) வெயிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,முல்லைத்தீவு, முத்தையன் கட்டுப் பகுதியில் வசித்து வரும் இளம் குடும்பஸ்தர் ஒருவர் தனது பொருளாதார நிலை காரணமாக வீடு அமைப்பதற்கான தகரத்தை பெறுவதற்காக இராணுவத்தினரின் அழைப்பின் பேரில் இராணுவ முகாமற்கு வேறு சிலருடன் சென்றுள்ளார்.குறித்த பகுதியில் நின்ற இராணுவத்தினர் குறித்த இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் அவர்கள் அச்சத்தின் காரணமாக ஓடியுள்ளதுடன், ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த காட்டுமிராண்டித் தனமான சம்பவத்தை வன்மையாக கண்டிப்பதுடன, இது தொடர்பில் நீதியான விசாரணை நடத்தப்பட்டு குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய இராணுவத்தினர் தண்டிக்கப்பட வேண்டும்.இச் செயற்பாடானது இராணுவத்தின் மனநிலையில் யுத்தம் முடிவடைந்து 16 வருடங்கள் கடந்தும் மாற்றம் ஏற்படவில்லை என்பதை வெளிபடுத்துவதுடன், அடக்குமுறை ஆட்சி தமிழர் தாயகப் பிரதேசத்தில் தொடர்ந்தும் இடம்பெறுவதை வெளிபடுத்தி நிற்கின்றது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.