• Aug 10 2025

முத்தையன்கட்டு இளைஞனின் உயிரிழப்பிற்கு இராணுவம் காரணமாகின் இலங்கை அரசின் இறுதி தருணம் இதுவாக இருக்கும் - வவுனியா மாநகரசபை துணை முதல்வர்!

shanuja / Aug 9th 2025, 10:15 pm
image

முத்தையன்கட்டு இளைஞனின் உயிரிழப்பிற்கு இராணுவம் காரணமாகின் இலங்கை அரசின் இறுதி தருணம் இதுவாக இருக்கும் என்று  வவுனியா மாநகரசபை துணை முதல்வர் பரமேஸ்வரன் கார்த்தீபன் தெரிவித்துள்ளார். 


முல்லைத்தீவு முத்தையன்கட்டு குளத்தில் இளைஞரது சடலம் மீட்கப்பட்டது தொடர்பாக வவுனியா மாநகரசபையின் துணை முதல்வர் பரமேஸ்வரன் கார்த்தீபன் ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டு மேற்கண்டவாறு தெரிவித்தார். 


அவர் அனுப்பிய ஊடக அறிக்கையில் மேலும் உள்ளதாவது, 


யுத்தம் முடிந்து ஒன்றரை தசாப்த காலம் முடிந்தும் இலங்கை இராணுவத்தினரது ஒரு சில நடத்தைகளும் செயற்பாடுகளும், பயங்கரவாத தடைச்சட்டமும் அமுலில் வைத்திருப்பது என்பது இன்னமும் தமிழர்கள் மீது ஆக்கிரமிப்பு கொள்வது போல் உள்ளது என்பது மிகவும் வேதனைக்குறியதும் கண்டிக்கத்தக்கதுமான விடயமாகும். 



முல்லைத்தீவு பகுதியில் இலங்கை இராணுவம் வெளியேறும் பகுதியில் உள்ள பொருட்களை பெற்றுக்கொள்வதற்காக ஐந்து இளைஞர்களை அழைத்த இராணுவம் , குறித்த முகாம் அமைந்திருந்த  பகுதியில் வைத்து இளைஞர்கள் மீது தாக்குதல் நடாத்தியதாகவும் அதிலிருந்து 4 இளைஞர்கள் தப்பியோடியதாகவும், ஒருவர் மாத்திரம் வெளிவரவில்லை எனவும், குறித்த நபருடைய சடலமே குளத்திலிருந்து மீட்கப்பட்டதாகவும், அவர்களது உறவினர்கள் மற்றும் ஊடகங்களூடாக செய்திகளை காணமுடிந்தது


குறித்த இளைஞனின் மரணத்திற்கு இலங்கை இராணுவமே காரணமாக இருப்பின் இது வன்மையாக கண்டிக்கத்தக்க விடயமாகும் 


இலங்கையின் தற்போதைய அரசு தங்களை ஒரு விடிவெள்ளிபோலும், இன, மத, பேதமின்றி சகல மக்களுக்குமான நீதியான அரசை கட்டியெழுப்புவோம் எனக்கூறி, அதை நம்பி வாக்களித்து வென்ற இந்த அரசாங்கம் இன்றுவரை பயங்கரவாத தடைச்சட்டத்தை இன்னமும் அகற்றாமல், ஒரு அரசியல் கைதியையேனும் விடுவிக்காமல், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் கண்ணீருக்கு எந்த ஓரு ஆறுதலை கூட வழங்க முடியாத இந்த அரசாங்கம் மீது இப்போது அவநம்பிக்கை மக்கள் மத்தியில் பரவிவருகிறது


இலங்கை அரசு என்பது எப்போதும் தமிழர்களுக்கான நீதியை வழங்காது என்பது எமது கண்முன் புலப்படுகிறது .


கடந்தகாலங்களில் எனது கட்சியும் அரசாங்க சர்பாக இருந்திருப்பினும், அரசு தமிழர்களுக்கு எதிராக செயல்படும்போது அதற்கு எதிராகவும் குரல் கொடுத்தவர்கள் என்பதை இங்கு பகிரங்கமாக தெரிவித்து கொள்கிறேன்.  


இதேவேளை குறித்த இளைஞனின் மரணத்திற்கு இலங்கை இராணுவம் காரணமாக இருப்பின், வடக்கு கிழக்கு தமிழர் தாயக பூமியில் உள்ள, தமிழ்பேசும் மக்கள் மாத்திரம் அல்ல, இலங்கை முழுவதும் உள்ள அனைத்து தமிழ் பேசும் உறவுகளும், இலங்கை அரசின் காட்டுமிராண்டி தனத்திற்கு எதிராக நிச்சயம் ஜனநாயக ரீதியில் மாபெரும் எழுச்சி போராட்டத்தை ஆரம்பிக்கும் என்பதை இந்த அரசிற்கு ஆனைத்தனமாக கூறிக்கொள்க விரும்புகிறேன். - என்று தெரிவித்துள்ளார்.

முத்தையன்கட்டு இளைஞனின் உயிரிழப்பிற்கு இராணுவம் காரணமாகின் இலங்கை அரசின் இறுதி தருணம் இதுவாக இருக்கும் - வவுனியா மாநகரசபை துணை முதல்வர் முத்தையன்கட்டு இளைஞனின் உயிரிழப்பிற்கு இராணுவம் காரணமாகின் இலங்கை அரசின் இறுதி தருணம் இதுவாக இருக்கும் என்று  வவுனியா மாநகரசபை துணை முதல்வர் பரமேஸ்வரன் கார்த்தீபன் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு முத்தையன்கட்டு குளத்தில் இளைஞரது சடலம் மீட்கப்பட்டது தொடர்பாக வவுனியா மாநகரசபையின் துணை முதல்வர் பரமேஸ்வரன் கார்த்தீபன் ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டு மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அனுப்பிய ஊடக அறிக்கையில் மேலும் உள்ளதாவது, யுத்தம் முடிந்து ஒன்றரை தசாப்த காலம் முடிந்தும் இலங்கை இராணுவத்தினரது ஒரு சில நடத்தைகளும் செயற்பாடுகளும், பயங்கரவாத தடைச்சட்டமும் அமுலில் வைத்திருப்பது என்பது இன்னமும் தமிழர்கள் மீது ஆக்கிரமிப்பு கொள்வது போல் உள்ளது என்பது மிகவும் வேதனைக்குறியதும் கண்டிக்கத்தக்கதுமான விடயமாகும். முல்லைத்தீவு பகுதியில் இலங்கை இராணுவம் வெளியேறும் பகுதியில் உள்ள பொருட்களை பெற்றுக்கொள்வதற்காக ஐந்து இளைஞர்களை அழைத்த இராணுவம் , குறித்த முகாம் அமைந்திருந்த  பகுதியில் வைத்து இளைஞர்கள் மீது தாக்குதல் நடாத்தியதாகவும் அதிலிருந்து 4 இளைஞர்கள் தப்பியோடியதாகவும், ஒருவர் மாத்திரம் வெளிவரவில்லை எனவும், குறித்த நபருடைய சடலமே குளத்திலிருந்து மீட்கப்பட்டதாகவும், அவர்களது உறவினர்கள் மற்றும் ஊடகங்களூடாக செய்திகளை காணமுடிந்ததுகுறித்த இளைஞனின் மரணத்திற்கு இலங்கை இராணுவமே காரணமாக இருப்பின் இது வன்மையாக கண்டிக்கத்தக்க விடயமாகும் இலங்கையின் தற்போதைய அரசு தங்களை ஒரு விடிவெள்ளிபோலும், இன, மத, பேதமின்றி சகல மக்களுக்குமான நீதியான அரசை கட்டியெழுப்புவோம் எனக்கூறி, அதை நம்பி வாக்களித்து வென்ற இந்த அரசாங்கம் இன்றுவரை பயங்கரவாத தடைச்சட்டத்தை இன்னமும் அகற்றாமல், ஒரு அரசியல் கைதியையேனும் விடுவிக்காமல், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் கண்ணீருக்கு எந்த ஓரு ஆறுதலை கூட வழங்க முடியாத இந்த அரசாங்கம் மீது இப்போது அவநம்பிக்கை மக்கள் மத்தியில் பரவிவருகிறதுஇலங்கை அரசு என்பது எப்போதும் தமிழர்களுக்கான நீதியை வழங்காது என்பது எமது கண்முன் புலப்படுகிறது .கடந்தகாலங்களில் எனது கட்சியும் அரசாங்க சர்பாக இருந்திருப்பினும், அரசு தமிழர்களுக்கு எதிராக செயல்படும்போது அதற்கு எதிராகவும் குரல் கொடுத்தவர்கள் என்பதை இங்கு பகிரங்கமாக தெரிவித்து கொள்கிறேன்.  இதேவேளை குறித்த இளைஞனின் மரணத்திற்கு இலங்கை இராணுவம் காரணமாக இருப்பின், வடக்கு கிழக்கு தமிழர் தாயக பூமியில் உள்ள, தமிழ்பேசும் மக்கள் மாத்திரம் அல்ல, இலங்கை முழுவதும் உள்ள அனைத்து தமிழ் பேசும் உறவுகளும், இலங்கை அரசின் காட்டுமிராண்டி தனத்திற்கு எதிராக நிச்சயம் ஜனநாயக ரீதியில் மாபெரும் எழுச்சி போராட்டத்தை ஆரம்பிக்கும் என்பதை இந்த அரசிற்கு ஆனைத்தனமாக கூறிக்கொள்க விரும்புகிறேன். - என்று தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement