• Jul 12 2025

மட்டக்களப்பில் பதற்றம்; தெய்வம் ஆடியவர் உயிரிழப்பு; தெய்வம் ஆடிய மற்றுமொருவரின் தாக்குதலில் ஒருவர் படுகாயம்

Chithra / Jul 11th 2025, 11:55 am
image

 

மட்டக்களப்பு - ஏறாவூர், களுவங்கேணி பிரதேசத்தில் பேச்சியமன் கோவிலில் இடம்பெற்ற வருடாந்த சடங்கின்போது தெய்வம் ஆடிய ஒருவர் திடிரென மயங்கிவிழுந்து உயிரிழந்ததுடன்,

தெய்வம் ஆடிய மற்றுமொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கியதில் ஒருவர் படுகாயமடைந்த சம்பவம் அங்கு பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இச் சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது. 

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில் 

ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள களுவங்கேணி - சிங்காரத்தோப்பு கிராமத்திலுள்ள பேச்சியம்மன் ஆலயத்தில் வருடாந்த திருவிழாவான இறுதி நாள் சடங்கு நேற்று இரவு 9.30 மணியளவில் இடம்பெற்றது. 

இதன் போது பக்தர்கள் ஆலயத்தினுள் தெய்வம் ஆடிக் கொண்டிருந்தபோது 37 வயதுடைய நிமலன் என்பவர்  திடீரென மயங்கி வீழ்ந்ததையடுத்து அவர் உயிரிழந்துள்ளார். 

இதனையடுத்து அங்கு தெய்வம் ஆடிக் கொண்டிருந்த மற்றுமொருவர், அங்கு நின்ற ஒருவர் மீது கூரிய ஆயுதத்தால் தாக்குதல் நடாத்தியதில், 

அவர் படுகாயமடைந்த நிலையில், மட்டக்களப்பு  போதனா வைத்தியசாலைஅனுமதிக்கப்பட்டுள்ளார். 

தாக்குதலை மேற்கொண்டவர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளதையடுத்து அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது.

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக  செங்கலடி வைத்தியசாலையில் ஓப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

மட்டக்களப்பில் பதற்றம்; தெய்வம் ஆடியவர் உயிரிழப்பு; தெய்வம் ஆடிய மற்றுமொருவரின் தாக்குதலில் ஒருவர் படுகாயம்  மட்டக்களப்பு - ஏறாவூர், களுவங்கேணி பிரதேசத்தில் பேச்சியமன் கோவிலில் இடம்பெற்ற வருடாந்த சடங்கின்போது தெய்வம் ஆடிய ஒருவர் திடிரென மயங்கிவிழுந்து உயிரிழந்ததுடன்,தெய்வம் ஆடிய மற்றுமொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கியதில் ஒருவர் படுகாயமடைந்த சம்பவம் அங்கு பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இச் சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில் ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள களுவங்கேணி - சிங்காரத்தோப்பு கிராமத்திலுள்ள பேச்சியம்மன் ஆலயத்தில் வருடாந்த திருவிழாவான இறுதி நாள் சடங்கு நேற்று இரவு 9.30 மணியளவில் இடம்பெற்றது. இதன் போது பக்தர்கள் ஆலயத்தினுள் தெய்வம் ஆடிக் கொண்டிருந்தபோது 37 வயதுடைய நிமலன் என்பவர்  திடீரென மயங்கி வீழ்ந்ததையடுத்து அவர் உயிரிழந்துள்ளார். இதனையடுத்து அங்கு தெய்வம் ஆடிக் கொண்டிருந்த மற்றுமொருவர், அங்கு நின்ற ஒருவர் மீது கூரிய ஆயுதத்தால் தாக்குதல் நடாத்தியதில், அவர் படுகாயமடைந்த நிலையில், மட்டக்களப்பு  போதனா வைத்தியசாலைஅனுமதிக்கப்பட்டுள்ளார். தாக்குதலை மேற்கொண்டவர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளதையடுத்து அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது.உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக  செங்கலடி வைத்தியசாலையில் ஓப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

Advertisement

Advertisement

Advertisement