• Aug 31 2025

இந்தோனேசியாவில் கைதான பாதாள உலக கும்பல்; பலத்த பாதுகாப்புடன் சற்றுமுன்னர் கட்டுநாயக்கவில்!

shanuja / Aug 30th 2025, 9:01 pm
image

இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் கைது செய்யப்பட்ட பாதாள உலகக் குழு தலைவர்களான கெஹல்பத்தர பத்மே உள்ளிட்ட ஐவரை அழைத்து வந்த விமானம் சற்றுமுன்னர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது. 


சில மணி நேர தாமதத்திற்குப் பிறகு இன்று (30) பிற்பகல் 3.30 மணியளவில் தலைநகர் ஜகார்த்தாவிலிருந்து புறப்பட்ட விமானம், மாலை 7.20 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது. 


இந்நிலையில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு உள்ளேயும் வெளியேயும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 


பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால, பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் வுட்லர் உள்ளிட்ட விசேட அதிரடிப் படையினர் மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சிரேஸ்ட அதிகாரிகள் குழுவும் இதனைக் கண்காணிக்க கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு  சென்றுள்ளனர். 


மேல் மாகாண வடக்கு குற்றப் பிரிவிற்கு பொறுப்பான உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரோஹன் ஓலுகல மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் உதவி பொலிஸ் அத்தியட்சகர் மஹிந்த ஜயசுந்தர ஆகிய இரு அதிகாரிகள் மற்றும் இந்தோனேசியாவின் விசேட பொலிஸ் குழுவும் இணைந்து இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இந்தோனேசியாவில் கைதான பாதாள உலக கும்பல்; பலத்த பாதுகாப்புடன் சற்றுமுன்னர் கட்டுநாயக்கவில் இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் கைது செய்யப்பட்ட பாதாள உலகக் குழு தலைவர்களான கெஹல்பத்தர பத்மே உள்ளிட்ட ஐவரை அழைத்து வந்த விமானம் சற்றுமுன்னர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது. சில மணி நேர தாமதத்திற்குப் பிறகு இன்று (30) பிற்பகல் 3.30 மணியளவில் தலைநகர் ஜகார்த்தாவிலிருந்து புறப்பட்ட விமானம், மாலை 7.20 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது. இந்நிலையில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு உள்ளேயும் வெளியேயும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால, பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் வுட்லர் உள்ளிட்ட விசேட அதிரடிப் படையினர் மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சிரேஸ்ட அதிகாரிகள் குழுவும் இதனைக் கண்காணிக்க கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு  சென்றுள்ளனர். மேல் மாகாண வடக்கு குற்றப் பிரிவிற்கு பொறுப்பான உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரோஹன் ஓலுகல மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் உதவி பொலிஸ் அத்தியட்சகர் மஹிந்த ஜயசுந்தர ஆகிய இரு அதிகாரிகள் மற்றும் இந்தோனேசியாவின் விசேட பொலிஸ் குழுவும் இணைந்து இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

Advertisement

Advertisement

Advertisement