• Sep 01 2025

நாளை முல்லைத்தீவில் பல திட்டங்களை ஆரம்பித்துவைக்கவுள்ள ஜனாதிபதி; விசேட அதிரடிப்படையினர் சோதனை

Chithra / Sep 1st 2025, 5:39 pm
image

 


ஜனாதிபதியாக பதவியேற்று ஒருவருட காலம் பூர்த்தியாவதை முன்னிட்டு முன்னெடுக்கப்படும் செயற்திட்டங்களின் ஆரம்ப நிகழ்வுகளை ஆரம்பித்து வைக்க நாளை ஜனாதிபதி அனுரகுமார திஸநாயக்க முல்லைத்தீவிற்கு விஜயம் செய்யவுள்ளார்.

முல்லைத்தீவிற்கு விஜயம் செய்யும் ஐனாதிபதி, தென்னை முக்கோண வலயம், வட்டுவாகல் பாலத்தின் புனரமைப்பு பணிகளை ஆரம்பித்து வைக்கவுள்ளார். 

இந்நிலையில் தென்னை முக்கோண வலயத்தினை ஆரம்பித்து வைப்பதற்கான முன்னாயத்த வேலைகள் புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி பொன்விழா மண்டப வளாகத்தில் மும்முரமாக இடம்பெற்று வருகின்றது.

இந்நிலையில் குறித்த பகுதியினை விசேட அதிரடிப்படையினர் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

நாளை முல்லைத்தீவில் பல திட்டங்களை ஆரம்பித்துவைக்கவுள்ள ஜனாதிபதி; விசேட அதிரடிப்படையினர் சோதனை  ஜனாதிபதியாக பதவியேற்று ஒருவருட காலம் பூர்த்தியாவதை முன்னிட்டு முன்னெடுக்கப்படும் செயற்திட்டங்களின் ஆரம்ப நிகழ்வுகளை ஆரம்பித்து வைக்க நாளை ஜனாதிபதி அனுரகுமார திஸநாயக்க முல்லைத்தீவிற்கு விஜயம் செய்யவுள்ளார்.முல்லைத்தீவிற்கு விஜயம் செய்யும் ஐனாதிபதி, தென்னை முக்கோண வலயம், வட்டுவாகல் பாலத்தின் புனரமைப்பு பணிகளை ஆரம்பித்து வைக்கவுள்ளார். இந்நிலையில் தென்னை முக்கோண வலயத்தினை ஆரம்பித்து வைப்பதற்கான முன்னாயத்த வேலைகள் புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி பொன்விழா மண்டப வளாகத்தில் மும்முரமாக இடம்பெற்று வருகின்றது.இந்நிலையில் குறித்த பகுதியினை விசேட அதிரடிப்படையினர் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement