• May 28 2025

அனல் மின் உற்பத்தியிடம் நாடு சரணாகதியாயிருப்பதே மின் கட்டண உயர்வுக்கு காரணம் - அனுசியா ஜெயகாந்த் சுட்டிக்காட்டு!

Chithra / May 27th 2025, 1:01 pm
image


சுற்றிவர கடலிருந்தும் உப்பு இறக்குமதி செய்வதைப் போலவே நாடுழுதும் இயற்கை வளங்கள் இருந்தும்  அனல் மின் உற்பத்தியிடம் நாடு சரணாகதியாயிருப்பதே மின் கட்டணம் உயர்வுக்கு காரணம் என உலக கியூப்   (WCA) அமைப்பின் இலங்கைக்கான நிகழ்ச்சி இணைப்பாளர் அனுசியா ஜெயகாந்த் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை மின்சார சபையினால் முன்மொழியப்பட்ட 2025 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதிக்கான மின்சார கட்டண திருத்தம் தொடர்பான மாற்றுப் பரிந்துரை குறித்து பொதுமக்களிடம் கருத்துக் கோரும் நடவடிக்கை இன்று (27)  யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.

இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு கூதிய அவர் மேலும் தெரிவிக்கையில் -

நாட்டில் ஆட்சி மாற்றம்  மட்டுமே மாற்றமாக ஏற்பட்டுள்ளதே தவிர பொருளதார நெருக்கடியோ  வழங்கிய வாக்குறுதிகளோ நிறைவு செய்யப்படாது மக்கள் ஏமற்றப்பட்டதே மிச்சமாக உள்ளது.

இந்நிலையில் மக்களின் மீது மீண்டும் மின் கட்டண அதிகரிப்பு என்ற சுமை சுமத்தப்படுவதகாகவும் அது தொடர்பில்  இங்கு ஆலோசனை செய்ய ஒன்றுகூடியுள்ளது நகைப்புக்குரியது.

நாட்டின் இயற்கை வளத்தால் நிறைவுசெய்யும்  உற்பத்தி செய்யக்கூடிய  ஏதுனிலை இருந்தும்  உலக வங்கியின் நிகழ்ச்சி நிரலுக்காக குறைக்க வேண்டிய மின்கட்டணத்தை மீண்டும் அதிகரிப்பதற்காக ஆராய்கின்றோம்  என்பதே உண்மை நிலைமைதாக உள்ளது.

இலங்கையில் தற்போது சூரிய மின் உற்பதி, காற்றாலை மின் உற்பத்தி, நீர் மின் உற்பத்தி என இயற்கை வடிவில் குறைந்த செலவில் உற்பத்தி செய்யும் ஏதுனிலை இருக்கும் போது,

ஏன் அனல் மின் உற்பத்திக்கு ஊக்குவிப்பும் அதில் தங்கி இருக்கும் நிலையிலும் எமது நாடு இருக்கின்றது. இதை ஏன் வல்லுனர்கள் சிந்திப்பதாக இல்லை. இதற்கு தீர்வு காணப்படுதல் அவசியம். 

ஆட்சியில் தற்போது இருக்கும் அரசாங்கம் ஆட்சிக்கு வர முன்னர்  கடந்த அரசாங்கங்கள் ஊழல் மோசடி செய்ததாக கூறியது.

ஆனால் இன்று அவர்களால்  ஏன் கட்டணங்களை குறைக்க முடியாதுள்ளது. சர்வதேச நாணய நிதியத்துக்கு அரசு பணிந்து விட்டதா? 

அல்லது இவர்களும் ஊழல் செய்கின்றார்களா? அல்லது கடந்த ஆட்சியாளர் மேல்  இவர்கள் பொய் குற்றம்  சுமத்தி உண்மையை மறைத்து மக்களை ஏமாற்றினார்களா? என்ற சந்தேகம் மக்களிடம் எழுகின்றது.

மின்சாரம் என்பது மக்களின்  அடிப்படை தேவைகளுள் ஒன்று. மக்களின் இந்த  அடிப்படை தேவையை வைத்து அரசியல் செய்வது நல்லதாகாது.

இதேவேளை ஏற்கனவே கட்டண உயர்வுக்கன முடிவை எடுத்துவிட்டு கண்துடைப்புக்காக இப்போது கருத்துக் கேட்பதும் ஊழல் தான். 

அந்தவகையில் பொதுப் பயன்பட்டு ஆணைக்குழு இந்த கருத்துக் கேட்கும் முயற்சியில் மின்கட்டணம் அதிகரிக்க கூடாது, 

சூரிய மின் உற்பதி, காற்றாலை மின் உற்பத்தி, நீர் மின் உற்பத்தி ஆகிவவற்றை மேம்படுத்த சிறந்த பொறிமுறை வகுக்கப்பட்டு அனல்மின் மாபியாவின் படியிலிருந்து நாட்டை மீட்பது அவசியம் என்றும் தெரிவித்தார்.

அனல் மின் உற்பத்தியிடம் நாடு சரணாகதியாயிருப்பதே மின் கட்டண உயர்வுக்கு காரணம் - அனுசியா ஜெயகாந்த் சுட்டிக்காட்டு சுற்றிவர கடலிருந்தும் உப்பு இறக்குமதி செய்வதைப் போலவே நாடுழுதும் இயற்கை வளங்கள் இருந்தும்  அனல் மின் உற்பத்தியிடம் நாடு சரணாகதியாயிருப்பதே மின் கட்டணம் உயர்வுக்கு காரணம் என உலக கியூப்   (WCA) அமைப்பின் இலங்கைக்கான நிகழ்ச்சி இணைப்பாளர் அனுசியா ஜெயகாந்த் சுட்டிக்காட்டியுள்ளார்.இலங்கை மின்சார சபையினால் முன்மொழியப்பட்ட 2025 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதிக்கான மின்சார கட்டண திருத்தம் தொடர்பான மாற்றுப் பரிந்துரை குறித்து பொதுமக்களிடம் கருத்துக் கோரும் நடவடிக்கை இன்று (27)  யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு கூதிய அவர் மேலும் தெரிவிக்கையில் -நாட்டில் ஆட்சி மாற்றம்  மட்டுமே மாற்றமாக ஏற்பட்டுள்ளதே தவிர பொருளதார நெருக்கடியோ  வழங்கிய வாக்குறுதிகளோ நிறைவு செய்யப்படாது மக்கள் ஏமற்றப்பட்டதே மிச்சமாக உள்ளது.இந்நிலையில் மக்களின் மீது மீண்டும் மின் கட்டண அதிகரிப்பு என்ற சுமை சுமத்தப்படுவதகாகவும் அது தொடர்பில்  இங்கு ஆலோசனை செய்ய ஒன்றுகூடியுள்ளது நகைப்புக்குரியது.நாட்டின் இயற்கை வளத்தால் நிறைவுசெய்யும்  உற்பத்தி செய்யக்கூடிய  ஏதுனிலை இருந்தும்  உலக வங்கியின் நிகழ்ச்சி நிரலுக்காக குறைக்க வேண்டிய மின்கட்டணத்தை மீண்டும் அதிகரிப்பதற்காக ஆராய்கின்றோம்  என்பதே உண்மை நிலைமைதாக உள்ளது.இலங்கையில் தற்போது சூரிய மின் உற்பதி, காற்றாலை மின் உற்பத்தி, நீர் மின் உற்பத்தி என இயற்கை வடிவில் குறைந்த செலவில் உற்பத்தி செய்யும் ஏதுனிலை இருக்கும் போது,ஏன் அனல் மின் உற்பத்திக்கு ஊக்குவிப்பும் அதில் தங்கி இருக்கும் நிலையிலும் எமது நாடு இருக்கின்றது. இதை ஏன் வல்லுனர்கள் சிந்திப்பதாக இல்லை. இதற்கு தீர்வு காணப்படுதல் அவசியம். ஆட்சியில் தற்போது இருக்கும் அரசாங்கம் ஆட்சிக்கு வர முன்னர்  கடந்த அரசாங்கங்கள் ஊழல் மோசடி செய்ததாக கூறியது.ஆனால் இன்று அவர்களால்  ஏன் கட்டணங்களை குறைக்க முடியாதுள்ளது. சர்வதேச நாணய நிதியத்துக்கு அரசு பணிந்து விட்டதா அல்லது இவர்களும் ஊழல் செய்கின்றார்களா அல்லது கடந்த ஆட்சியாளர் மேல்  இவர்கள் பொய் குற்றம்  சுமத்தி உண்மையை மறைத்து மக்களை ஏமாற்றினார்களா என்ற சந்தேகம் மக்களிடம் எழுகின்றது.மின்சாரம் என்பது மக்களின்  அடிப்படை தேவைகளுள் ஒன்று. மக்களின் இந்த  அடிப்படை தேவையை வைத்து அரசியல் செய்வது நல்லதாகாது.இதேவேளை ஏற்கனவே கட்டண உயர்வுக்கன முடிவை எடுத்துவிட்டு கண்துடைப்புக்காக இப்போது கருத்துக் கேட்பதும் ஊழல் தான். அந்தவகையில் பொதுப் பயன்பட்டு ஆணைக்குழு இந்த கருத்துக் கேட்கும் முயற்சியில் மின்கட்டணம் அதிகரிக்க கூடாது, சூரிய மின் உற்பதி, காற்றாலை மின் உற்பத்தி, நீர் மின் உற்பத்தி ஆகிவவற்றை மேம்படுத்த சிறந்த பொறிமுறை வகுக்கப்பட்டு அனல்மின் மாபியாவின் படியிலிருந்து நாட்டை மீட்பது அவசியம் என்றும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement