சம்பூர் மகா வித்தியாலயத்தில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்து தருமாறு கோரி பாடசாலை மாணவர்களின் பெற்றோர்கள் இன்று(26) காலை பாடசாலைக்கு முன்பாக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சம்பூர் மகா வித்தியாலயத்தில் 526 பாடசாலை மாணவர்கள் கல்வி கற்கின்றனர். அத்தோடு அபிவிருத்தி உத்தியோககத்தர் -04, ஆசிரியர்கள் -20 என தற்போது கடமையாற்றுகின்றனர்.
எனினும் கணிதம் , ஆங்கிலம், விஞ்ஞானம்,உள்ளிட்ட 6 முக்கிய பாடங்களுக்கு ஆசிரியர் பற்றாக்குறை காணப்படுவதாகவும் இதனை நிவர்த்தி செய்து தருமாறு கோரியே இவ் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
ஆர்ப்பாட்ட இடத்திற்கு மூதூர் வலய கல்வி அலுவலகத்தின் பிரதிக் கல்விப் பணிப்பாளர் தேவதாஷ் ஜெயந்தன் வருகை தந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களோடு கலந்துரையாடினார்.
அத்தோடு ஆசிரியர் பற்றாக்குறைக்கு முடியுமான ஏற்பாடுகளை செய்து தருவதாக தெரிவித்ததை எடுத்து ஆர்ப்பாட்டக்காரர்கள் குறித்த இடத்திலிருந்து வெளியேறிச் சென்றமை குறிப்பிடத்தக்கது.
ஆசிரியர் பற்றாக்குறை; நிவர்த்தி செய்து தருமாறு கோரி சம்பூரில் ஆர்ப்பாட்டம். சம்பூர் மகா வித்தியாலயத்தில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்து தருமாறு கோரி பாடசாலை மாணவர்களின் பெற்றோர்கள் இன்று(26) காலை பாடசாலைக்கு முன்பாக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.சம்பூர் மகா வித்தியாலயத்தில் 526 பாடசாலை மாணவர்கள் கல்வி கற்கின்றனர். அத்தோடு அபிவிருத்தி உத்தியோககத்தர் -04, ஆசிரியர்கள் -20 என தற்போது கடமையாற்றுகின்றனர்.எனினும் கணிதம் , ஆங்கிலம், விஞ்ஞானம்,உள்ளிட்ட 6 முக்கிய பாடங்களுக்கு ஆசிரியர் பற்றாக்குறை காணப்படுவதாகவும் இதனை நிவர்த்தி செய்து தருமாறு கோரியே இவ் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் சுலோகங்களை ஏந்தி கோசங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.ஆர்ப்பாட்ட இடத்திற்கு மூதூர் வலய கல்வி அலுவலகத்தின் பிரதிக் கல்விப் பணிப்பாளர் தேவதாஷ் ஜெயந்தன் வருகை தந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களோடு கலந்துரையாடினார்.அத்தோடு ஆசிரியர் பற்றாக்குறைக்கு முடியுமான ஏற்பாடுகளை செய்து தருவதாக தெரிவித்ததை எடுத்து ஆர்ப்பாட்டக்காரர்கள் குறித்த இடத்திலிருந்து வெளியேறிச் சென்றமை குறிப்பிடத்தக்கது.