• Dec 28 2025

கொழும்பு திரும்பும் பயணிகளுக்காக இன்று முதல் விசேட போக்குவரத்து சேவைகள்

Chithra / Dec 28th 2025, 8:53 am
image

 

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு தத்தமது கிராமங்களுக்குச் சென்ற மக்கள் கொழும்புக்கு மீளத் திரும்புவதற்காக இன்று முதல் விசேட போக்குவரத்து சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. 

 

அதன்படி, கொழும்புக்கு வரும் மக்களுக்காக மேலதிக நீண்ட தூரச் சேவைகள் திட்டமிடப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. 

 

பல மாகாணங்களிலிருந்து கொழும்புக்கு வரும் மக்களுக்காகப் பேருந்துகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. 

 

இதேவேளை, கொழும்பு கோட்டை - காங்கேசன்துறை எக்ஸ்பிரஸ்  ரயில் இன்று இயக்கப்படவுள்ளது. 

 

மேலும், நாளை அதிகாலை 5 மணிக்கு மாத்தறையில் இருந்து கொழும்பு கோட்டைக்கு விசேட  ரயில் இயக்கப்படவுள்ளதாக  ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொழும்பு திரும்பும் பயணிகளுக்காக இன்று முதல் விசேட போக்குவரத்து சேவைகள்  பண்டிகைக் காலத்தை முன்னிட்டு தத்தமது கிராமங்களுக்குச் சென்ற மக்கள் கொழும்புக்கு மீளத் திரும்புவதற்காக இன்று முதல் விசேட போக்குவரத்து சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.  அதன்படி, கொழும்புக்கு வரும் மக்களுக்காக மேலதிக நீண்ட தூரச் சேவைகள் திட்டமிடப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.  பல மாகாணங்களிலிருந்து கொழும்புக்கு வரும் மக்களுக்காகப் பேருந்துகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.  இதேவேளை, கொழும்பு கோட்டை - காங்கேசன்துறை எக்ஸ்பிரஸ்  ரயில் இன்று இயக்கப்படவுள்ளது.  மேலும், நாளை அதிகாலை 5 மணிக்கு மாத்தறையில் இருந்து கொழும்பு கோட்டைக்கு விசேட  ரயில் இயக்கப்படவுள்ளதாக  ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement