• Dec 28 2025

மருதங்கேணி வைத்தியசாலையின் குறைகள் நிவர்த்தி செய்யப்படும்; ஜனநாயக போராளிகள் கட்சி தலைவர் !

dileesiya / Dec 27th 2025, 2:54 pm
image

யாழ் வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பிரதேச வைத்தியசாலை பல குறைபாடுகளை கொண்டதாக இருந்த போதும் கடந்த சில நாட்களுக்கு முன் வடமராட்சி கிழக்கு பிரதேச அபிவிருத்தி குழு தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ரஜீபன்  வருகை தந்து குறைகளை பார்வையிட்டு சென்று அதனை நிவர்த்தி செய்து தருவதாக கூறி சென்றுள்ளார்.

அதனை தொடர்ந்து  ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் இணைத் தலைவரும் ஜனநாயக போராளிகள் கட்சி தலைவருமான வேந்தன்  மருதங்கேணி பிரதேச வைத்தியசாலைக்கு விஜயம் செய்து குறைகளை பார்வையிட்டதுடன் வைத்தியசாலை வளாகம் அதிகளவு நீர் தேங்கி நிற்பதாகவும் அதனால் வைத்தியசாலை சமூகம் பல பிரச்சனைகளை எதிர் நோக்குவதாகவும் கூறினார்.

உடனடியாக கனடா புளூஸ் அறக்கட்டளை  உதவியுடன் நீர் தேங்கி நிற்கும் இடங்களை மண் பரப்புவதற்காக ரூபா 60 000 கொடுக்கப்பட்டது. 

அத்துடன் வைத்தியசாலைக்கு தற்போது தேவையான தேவைகள் தொடர்பாக அறிக்கை ஒன்று பெறப்பட்டு அதனை கட்டம் கட்டமாக நிவர்த்தி செய்து தருவதாகவும் கூறிச்சென்றார் .

இவ் சந்திப்பில் ஜனநாயக போராளிகள் கட்சியின் முக்கியஸ்தர்கள் மற்றும் பருத்துறை பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

மருதங்கேணி வைத்தியசாலையின் குறைகள் நிவர்த்தி செய்யப்படும்; ஜனநாயக போராளிகள் கட்சி தலைவர் யாழ் வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பிரதேச வைத்தியசாலை பல குறைபாடுகளை கொண்டதாக இருந்த போதும் கடந்த சில நாட்களுக்கு முன் வடமராட்சி கிழக்கு பிரதேச அபிவிருத்தி குழு தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ரஜீபன்  வருகை தந்து குறைகளை பார்வையிட்டு சென்று அதனை நிவர்த்தி செய்து தருவதாக கூறி சென்றுள்ளார்.அதனை தொடர்ந்து  ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் இணைத் தலைவரும் ஜனநாயக போராளிகள் கட்சி தலைவருமான வேந்தன்  மருதங்கேணி பிரதேச வைத்தியசாலைக்கு விஜயம் செய்து குறைகளை பார்வையிட்டதுடன் வைத்தியசாலை வளாகம் அதிகளவு நீர் தேங்கி நிற்பதாகவும் அதனால் வைத்தியசாலை சமூகம் பல பிரச்சனைகளை எதிர் நோக்குவதாகவும் கூறினார்.உடனடியாக கனடா புளூஸ் அறக்கட்டளை  உதவியுடன் நீர் தேங்கி நிற்கும் இடங்களை மண் பரப்புவதற்காக ரூபா 60 000 கொடுக்கப்பட்டது. அத்துடன் வைத்தியசாலைக்கு தற்போது தேவையான தேவைகள் தொடர்பாக அறிக்கை ஒன்று பெறப்பட்டு அதனை கட்டம் கட்டமாக நிவர்த்தி செய்து தருவதாகவும் கூறிச்சென்றார் .இவ் சந்திப்பில் ஜனநாயக போராளிகள் கட்சியின் முக்கியஸ்தர்கள் மற்றும் பருத்துறை பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement