• Dec 28 2025

மட்டக்களப்பில் மனிதர்களை அச்சுறுத்திவந்த இராட்சத முதலை இறந்த நிலையில் கரையொதுங்கியது

Chithra / Dec 27th 2025, 2:26 pm
image

  

மட்டக்களப்பு காத்தான்குடி வாவியில் மனிதர்களையும், விலங்குகளையும் பிடித்து உணவாக உட்கொண்டு நீண்ட நாட்களாக அட்டகாசம் செய்து வந்த இராட்சத முதலை இன்று காலை இறந்த நிலையில் கரையொதுங்கியது.


இராட்சத முதலை கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இரு நபர்களை கொன்று உணவகக்கியுள்ளது. பல மாடுகள், ஆடுகள், நாய்கள், பூனைகளையும் இரையாக்கியுள்ளது. 


குறித்த இராட்சத முதலையைப் பிடிக்க, மாவட்ட வன ஜீவராசிகள் திணைக்களம், காத்தான்குடி நகர சபை வாவியோரத்தில் கூட்டினை பொருத்தி முயற்சிசெய்த போதிலும் முடியாமல்போன நிலையில் இன்று காலை இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளது


சுமார் 18 அடி நீளமுள்ள இம்முதலையினால் வாவியொரத்தை அண்டி வாழும் மக்கள் பெரும் அச்சுறுத்தல்களை எதிர்கொண்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.


இந்நிலையில், உயிரிழந்த நிலையில் கரையோதுங்கியுள்ள முதலையை பார்வையிடுவதற்காக சம்பவ இடத்தில் அதிகளவில் பொதுமக்கள் கூடியுள்ளமை குறிப்பிடப்படுகிறது.


மட்டக்களப்பில் மனிதர்களை அச்சுறுத்திவந்த இராட்சத முதலை இறந்த நிலையில் கரையொதுங்கியது   மட்டக்களப்பு காத்தான்குடி வாவியில் மனிதர்களையும், விலங்குகளையும் பிடித்து உணவாக உட்கொண்டு நீண்ட நாட்களாக அட்டகாசம் செய்து வந்த இராட்சத முதலை இன்று காலை இறந்த நிலையில் கரையொதுங்கியது.இராட்சத முதலை கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இரு நபர்களை கொன்று உணவகக்கியுள்ளது. பல மாடுகள், ஆடுகள், நாய்கள், பூனைகளையும் இரையாக்கியுள்ளது. குறித்த இராட்சத முதலையைப் பிடிக்க, மாவட்ட வன ஜீவராசிகள் திணைக்களம், காத்தான்குடி நகர சபை வாவியோரத்தில் கூட்டினை பொருத்தி முயற்சிசெய்த போதிலும் முடியாமல்போன நிலையில் இன்று காலை இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளதுசுமார் 18 அடி நீளமுள்ள இம்முதலையினால் வாவியொரத்தை அண்டி வாழும் மக்கள் பெரும் அச்சுறுத்தல்களை எதிர்கொண்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.இந்நிலையில், உயிரிழந்த நிலையில் கரையோதுங்கியுள்ள முதலையை பார்வையிடுவதற்காக சம்பவ இடத்தில் அதிகளவில் பொதுமக்கள் கூடியுள்ளமை குறிப்பிடப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement