• Dec 28 2025

இரண்டாவது முறை உச்சம் தொட்ட தங்கம் ; இன்று 12000 ரூபாவால் அதிரடியாக உயர்வு!

shanuja / Dec 27th 2025, 9:23 pm
image

உலகச் சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்துள்ள நிலையில், அதற்கு நிகராக இலங்கையிலும் தங்கத்தின் விலை உச்சம் தொட்டு வருகின்றது. 


அதன்படி இன்றைய தங்க நிலவரப்படி, உலகச் சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4,553 அமெரிக்க டொலர்கள் வரை அதிகரித்துள்ளது. 


இதன் அடிப்படையில், நாட்டில்  இன்று (27) மட்டும்  இரண்டாவது தடவையாகவும் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது. 


அதன்படி இன்றைய தினம் மாத்திரம் 12,000 ரூபாவால் தங்க விலை அதிகரித்துள்ளது. கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க விற்பனை நிலவரப்படி, 


22 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 340,400 ரூபாவாக அதிகரித்துள்ளது. இது நேற்றைய தினம் 329,300 ரூபாவாக காணப்பட்டது. 


அதேநேரம், 24 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 368,000 ரூபாவாக உயர்ந்துள்ளது. இது நேற்றைய தினம் 356,000 ரூபாவாக காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


நாளுக்கு நாள் அதிகரித்த தங்கம் இன்று மட்டும் 12000 ரூபாவால் அதிகரித்துள்ளமை நகைப்பிரியர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இரண்டாவது முறை உச்சம் தொட்ட தங்கம் ; இன்று 12000 ரூபாவால் அதிரடியாக உயர்வு உலகச் சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்துள்ள நிலையில், அதற்கு நிகராக இலங்கையிலும் தங்கத்தின் விலை உச்சம் தொட்டு வருகின்றது. அதன்படி இன்றைய தங்க நிலவரப்படி, உலகச் சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4,553 அமெரிக்க டொலர்கள் வரை அதிகரித்துள்ளது. இதன் அடிப்படையில், நாட்டில்  இன்று (27) மட்டும்  இரண்டாவது தடவையாகவும் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது. அதன்படி இன்றைய தினம் மாத்திரம் 12,000 ரூபாவால் தங்க விலை அதிகரித்துள்ளது. கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க விற்பனை நிலவரப்படி, 22 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 340,400 ரூபாவாக அதிகரித்துள்ளது. இது நேற்றைய தினம் 329,300 ரூபாவாக காணப்பட்டது. அதேநேரம், 24 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 368,000 ரூபாவாக உயர்ந்துள்ளது. இது நேற்றைய தினம் 356,000 ரூபாவாக காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.நாளுக்கு நாள் அதிகரித்த தங்கம் இன்று மட்டும் 12000 ரூபாவால் அதிகரித்துள்ளமை நகைப்பிரியர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement