பருத்தித்துறை பேருந்து நிலைய பகுதியில் சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்துகளுக்காக வரையறுத்து ஒதுக்கப்படிருக்கும் ஒழுங்குமுறைகளை மீறும் சிற்றூர்திகளுக்கான அனுமதி ரத்து செய்யப்படும் என நகரபிதா வின்சென் டீ போல் டக்ளஸ் போல் அறிவுறுத்தியுள்ள்ளார்.
பருத்தித்துறை நகரசபை மாநாட்டு மண்டபத்தில் கடந்தவெள்ளிக்கிழமை (26) காலை 9.30 மணிக்கு இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே நகரபிதாவினால் இவ்வாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பருத்தித்துறை நவீன சந்தை கட்டிடத் தொகுதியின் தெற்கு பக்கமாக தனியார் பேருந்துகள் நிறுத்தப்பட்டு சேவையில் ஈடுபட்டு வருகின்றன.
இதன் காரணமாக நவீன சந்தை கட்டிடத் தொகுதியில் உள்ள வர்த்தக நிலையங்கள் மூடி மறைக்கப்பட்டு வியாபார நடவடிக்கைகள் பாதிக்கப்படும் நிலை காணப்பட்டு வந்தது.
பருத்தித்துறை நவீன சந்தை கட்டடிடத் தொகுதி திறக்கப்பட்ட காலம் முதல் சுமார் 12 ஆண்டுகளாக நிலவி வரும் இப்பிரச்சினை தொடர்பில் பாதிக்கப்பட்ட வர்த்தகர்கள் முறையிட்டும் எதுவித தீர்வும் எட்டப்படாதிருந்துள்ளது.
இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பில் பருத்தித்துறை வர்த்தகர் சங்க நிர்வாகத்தினால் நகரபிதா வின்சன் டி போல் டக்ளஸ் போலிடம் சுட்டிக்காட்டப்பட்டதையடுத்து கடந்த ஒக்டோபர் 13, 14 ஆம் திகதிகளில் குறித்த இடத்திற்கு நேரில் விஜயம் செய்து வர்த்தகர் சங்க நிர்வாகத்தினரது பிரசன்னத்தில் நவீன சந்தை கட்டடத்தொகுதியில் உள்ள வர்த்தக நிலையங்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தனியார் பேருந்துகளை குறித்த இடைவெளியில் நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்ததுடன் குறித்த நடைமுறை உடனடியாகவே நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டிருந்தது.
சுமார் இரண்டு மாதங்கள் குறித்த ஒழுங்குமுறை பின்பற்றப்பட்டு வந்த நிலையில் கடந்த இரு வாரமாக அதனை மீறி முற்றாக வர்த்தக நிலையங்களை மூடி மறைத்து தனியார் பேருந்துகளை நிறுத்தப்பட்டு வந்தது.
இச்செயற்பாட்டினால் தற்போதைய பண்டிகை காலத்தில் வியாபார நடவடிக்கையினை சரியாக முன்னெடுக்க முடியாது வர்த்தகர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
இது தொடர்பில் வர்த்தகர் சங்கத்தினரால் நகரபிதாவிடம் சுட்டிக்காட்டப்பட்டது. இதையடுத்து தனியார் சிற்றூர்தி சேவைச் சங்க பிரதிநிதிகள், வர்த்தகர் சங்க பிரதிநிதிகள் அழைக்கப்பட்டு நகரபிதா தலைமையில் கல்ந்துரையாடப்பட்டிருந்தது.
இதன்போது, 750, 751, 759, 762 மற்றும் முல்லைத்தீவு வழித்தடங்களில் சேவையில் ஈடுபட்டு வரும் தனியார் பேருந்துகளில் தலா ஒவ்வொரு பேருந்து என்ற அடிப்படையில் முன்னதாக குறித்து ஒதுக்கப்பட்ட இடங்களில் நிறுத்தி சேவையில் ஈடுபட வேண்டும் எனவும் குறித்த ஒழுங்குமுறையை மீறி செயற்படுமிடத்து நிகழ்விட தண்டப்பணம் அறவிடப்படுவதுடன் குறித்த பேருந்திற்கான அனுமதி ரத்துசெய்யப்படும் எனவும் நகரபிதா வின்சென் டீ போல் டக்ளஸ் போலினால் அறிவுறுத்தப்பட்டது.
அத்துடன் சேவை முடிந்து திரும்பும் தனியார் பேருந்துகள் குறித்த தரிப்பிடத்திலேயே பேருந்தில் காணப்படும் குப்பைகளை தட்டிக்கொட்டுவதுடன் பேருந்தினை கழுவியும் வருகின்றனர். இச்செயற்பாடானது நகரினை சுத்தமாக வைத்திருக்கும் செயற்பாட்டிற்கு தரடயாகவுள்ளதுடன் பொதுச்சுகாதாரத்திற்கு பாதிப்பினை ஏற்படுத்துவதாக சுட்டிக்காட்டி அவ்வாறான செயற்பாட்டினை இனிமேல் செய்ய முடியாது எனவும் அது தொடர்பில் நகரசபை பொதுச்சுகாதார பரிசோதகரினால் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அறிவுறுத்தப்பட்டது.
குறித்த நடைமுறை உடனடியாக அமுல்படுத்தப்பட வேண்டும் எனவும் 2026 ஜனவரி 01 முதல் நிகழ்விட தண்டப்பணம் அறவிடப்படுவதுடன் குறித்த பேருந்திற்கான அனுமதி ரத்துசெய்யப்பட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நகரபிதாவினால் தெரிவிக்கப்பட்டது.
இதேவேளை, இருதரப்பிலும் மேற்குறித்த விடயங்கள் தொடர்பில் சுட்டிக்காட்டப்பட்டது. அவை தொடர்பில் கலந்துரையாடப்பட்டு நகரசபை தரப்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இதன்போது, நகரபிதா, நகரசபை உத்தியோகத்தர்கள், தனியார் சிற்றூர்தி சங்கத்தினர் மற்றும் வர்த்தகர் சங்கத்தினர் பங்கேற்றிருந்தனர்.
தனியார் பேருந்து தரிப்பிட ஒழுங்குமுறைகளை மீறின் அனுமதி ரத்து;பருத்தித்துறை நகரபிதா பருத்தித்துறை பேருந்து நிலைய பகுதியில் சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்துகளுக்காக வரையறுத்து ஒதுக்கப்படிருக்கும் ஒழுங்குமுறைகளை மீறும் சிற்றூர்திகளுக்கான அனுமதி ரத்து செய்யப்படும் என நகரபிதா வின்சென் டீ போல் டக்ளஸ் போல் அறிவுறுத்தியுள்ள்ளார். பருத்தித்துறை நகரசபை மாநாட்டு மண்டபத்தில் கடந்தவெள்ளிக்கிழமை (26) காலை 9.30 மணிக்கு இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே நகரபிதாவினால் இவ்வாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.பருத்தித்துறை நவீன சந்தை கட்டிடத் தொகுதியின் தெற்கு பக்கமாக தனியார் பேருந்துகள் நிறுத்தப்பட்டு சேவையில் ஈடுபட்டு வருகின்றன. இதன் காரணமாக நவீன சந்தை கட்டிடத் தொகுதியில் உள்ள வர்த்தக நிலையங்கள் மூடி மறைக்கப்பட்டு வியாபார நடவடிக்கைகள் பாதிக்கப்படும் நிலை காணப்பட்டு வந்தது. பருத்தித்துறை நவீன சந்தை கட்டடிடத் தொகுதி திறக்கப்பட்ட காலம் முதல் சுமார் 12 ஆண்டுகளாக நிலவி வரும் இப்பிரச்சினை தொடர்பில் பாதிக்கப்பட்ட வர்த்தகர்கள் முறையிட்டும் எதுவித தீர்வும் எட்டப்படாதிருந்துள்ளது. இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பில் பருத்தித்துறை வர்த்தகர் சங்க நிர்வாகத்தினால் நகரபிதா வின்சன் டி போல் டக்ளஸ் போலிடம் சுட்டிக்காட்டப்பட்டதையடுத்து கடந்த ஒக்டோபர் 13, 14 ஆம் திகதிகளில் குறித்த இடத்திற்கு நேரில் விஜயம் செய்து வர்த்தகர் சங்க நிர்வாகத்தினரது பிரசன்னத்தில் நவீன சந்தை கட்டடத்தொகுதியில் உள்ள வர்த்தக நிலையங்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தனியார் பேருந்துகளை குறித்த இடைவெளியில் நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்ததுடன் குறித்த நடைமுறை உடனடியாகவே நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டிருந்தது. சுமார் இரண்டு மாதங்கள் குறித்த ஒழுங்குமுறை பின்பற்றப்பட்டு வந்த நிலையில் கடந்த இரு வாரமாக அதனை மீறி முற்றாக வர்த்தக நிலையங்களை மூடி மறைத்து தனியார் பேருந்துகளை நிறுத்தப்பட்டு வந்தது. இச்செயற்பாட்டினால் தற்போதைய பண்டிகை காலத்தில் வியாபார நடவடிக்கையினை சரியாக முன்னெடுக்க முடியாது வர்த்தகர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இது தொடர்பில் வர்த்தகர் சங்கத்தினரால் நகரபிதாவிடம் சுட்டிக்காட்டப்பட்டது. இதையடுத்து தனியார் சிற்றூர்தி சேவைச் சங்க பிரதிநிதிகள், வர்த்தகர் சங்க பிரதிநிதிகள் அழைக்கப்பட்டு நகரபிதா தலைமையில் கல்ந்துரையாடப்பட்டிருந்தது. இதன்போது, 750, 751, 759, 762 மற்றும் முல்லைத்தீவு வழித்தடங்களில் சேவையில் ஈடுபட்டு வரும் தனியார் பேருந்துகளில் தலா ஒவ்வொரு பேருந்து என்ற அடிப்படையில் முன்னதாக குறித்து ஒதுக்கப்பட்ட இடங்களில் நிறுத்தி சேவையில் ஈடுபட வேண்டும் எனவும் குறித்த ஒழுங்குமுறையை மீறி செயற்படுமிடத்து நிகழ்விட தண்டப்பணம் அறவிடப்படுவதுடன் குறித்த பேருந்திற்கான அனுமதி ரத்துசெய்யப்படும் எனவும் நகரபிதா வின்சென் டீ போல் டக்ளஸ் போலினால் அறிவுறுத்தப்பட்டது. அத்துடன் சேவை முடிந்து திரும்பும் தனியார் பேருந்துகள் குறித்த தரிப்பிடத்திலேயே பேருந்தில் காணப்படும் குப்பைகளை தட்டிக்கொட்டுவதுடன் பேருந்தினை கழுவியும் வருகின்றனர். இச்செயற்பாடானது நகரினை சுத்தமாக வைத்திருக்கும் செயற்பாட்டிற்கு தரடயாகவுள்ளதுடன் பொதுச்சுகாதாரத்திற்கு பாதிப்பினை ஏற்படுத்துவதாக சுட்டிக்காட்டி அவ்வாறான செயற்பாட்டினை இனிமேல் செய்ய முடியாது எனவும் அது தொடர்பில் நகரசபை பொதுச்சுகாதார பரிசோதகரினால் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அறிவுறுத்தப்பட்டது. குறித்த நடைமுறை உடனடியாக அமுல்படுத்தப்பட வேண்டும் எனவும் 2026 ஜனவரி 01 முதல் நிகழ்விட தண்டப்பணம் அறவிடப்படுவதுடன் குறித்த பேருந்திற்கான அனுமதி ரத்துசெய்யப்பட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நகரபிதாவினால் தெரிவிக்கப்பட்டது. இதேவேளை, இருதரப்பிலும் மேற்குறித்த விடயங்கள் தொடர்பில் சுட்டிக்காட்டப்பட்டது. அவை தொடர்பில் கலந்துரையாடப்பட்டு நகரசபை தரப்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இதன்போது, நகரபிதா, நகரசபை உத்தியோகத்தர்கள், தனியார் சிற்றூர்தி சங்கத்தினர் மற்றும் வர்த்தகர் சங்கத்தினர் பங்கேற்றிருந்தனர்.