• Dec 28 2025

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் யாழ்.மாவட்ட அமைப்பாளராக சபா குகதாஸ்

Chithra / Dec 28th 2025, 4:14 pm
image


தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் 12வது தேசிய மாநாட்டை 2026 தை 24 மற்றும் 25ஆம் திகதிகளில் நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டது.

இந்நிலையில் அதற்கு முன்பாக வடக்கு, கிழக்கு மாகாணங்களின் எட்டு மாவட்டங்களிலும் 225 பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்களை தெரிவு செய்வதற்குமான தெரிவுக் கூட்டங்கள் இடம்பெற்று வருகிறது.

இந்நிலையில் நேற்று, யாழ். மாவட்ட  உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட அமைப்பாளரை தெரிவு செய்யும் கூட்டம் கச்சேரியடியில் உள்ள மண்டபத்தில்  நடைபெற்றது.

அந்தவகையில் யாழ். மாவட்ட அமைப்பாளராக முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் சபா குகதாஸ் மாவட்ட செயற்குழு உறுப்பினர்களால் ஏக மனதாக தெரிவு செய்யப்பட்டார். அத்துடன் பொதுக்குழு உறுப்பினர்களாக 45 பேர் தெரிவாகினர்.

கட்சியின் பிரதான பொறுப்புக்களில் மாற்றங்களை ஏற்படுத்தி இளையவர்களுக்கு வழிவிடும் வகையில் 12 வது மாநாடு அமையவுள்ளதாக ரெலோ கட்சி தெரிவித்துள்ளது.

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் யாழ்.மாவட்ட அமைப்பாளராக சபா குகதாஸ் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் 12வது தேசிய மாநாட்டை 2026 தை 24 மற்றும் 25ஆம் திகதிகளில் நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டது.இந்நிலையில் அதற்கு முன்பாக வடக்கு, கிழக்கு மாகாணங்களின் எட்டு மாவட்டங்களிலும் 225 பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்களை தெரிவு செய்வதற்குமான தெரிவுக் கூட்டங்கள் இடம்பெற்று வருகிறது.இந்நிலையில் நேற்று, யாழ். மாவட்ட  உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட அமைப்பாளரை தெரிவு செய்யும் கூட்டம் கச்சேரியடியில் உள்ள மண்டபத்தில்  நடைபெற்றது.அந்தவகையில் யாழ். மாவட்ட அமைப்பாளராக முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் சபா குகதாஸ் மாவட்ட செயற்குழு உறுப்பினர்களால் ஏக மனதாக தெரிவு செய்யப்பட்டார். அத்துடன் பொதுக்குழு உறுப்பினர்களாக 45 பேர் தெரிவாகினர்.கட்சியின் பிரதான பொறுப்புக்களில் மாற்றங்களை ஏற்படுத்தி இளையவர்களுக்கு வழிவிடும் வகையில் 12 வது மாநாடு அமையவுள்ளதாக ரெலோ கட்சி தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement