• Jul 14 2025

வவுனியாவில் வீதியோரக் கடைகள் அகற்றம்; பழங்களை உண்டு மகிழ்ந்த ஊழியர்கள்

Chithra / Jul 13th 2025, 1:43 pm
image


வவுனியா மாநகரசபையால் இன்று யாழ் வீதியில் வீதியோரங்களில் உள்ள  சில கடைகளை போக்குவரத்துக் இடையூறாக இருப்பதாக தெரிவித்து அகற்றப்பட்டிருந்தது.

இவ்வாறு அகற்றப்பட்ட வீதியோரக் கடைகளில் இருந்த பழங்கள், மரக்கறிகள் உழவியந்திரத்தில் ஏற்றி மாநகர சபை வளாகத்துக்கு கொண்டு செல்லப்பட்டிருந்தது.

குறித்த பொருட்கள் மாநகர சபை வளாகத்துக்கு கொண்டு சென்றதன் பின்னர் அங்கிருந்த ஊழியர்கள் அப்பழங்களை பைகளில் இட்டு தாம் கொண்டு செல்வதற்கு தயாராக இருந்ததோடு சிலர் பழங்களை உண்டு மகிழ்ந்ததையும் அவதானிக்க கூடியதாக காணப்பட்டது.

வீதியோரத்தில் வாழ்வாதாரத்துக்காக தொழில் செய்தவர்களின் பொருட்களை உழவியந்திரத்தில் ஏற்றி சென்ற மாநகரசபை ஊழியர்கள், குறித்த பொருட்களை தாம் எடுத்துச் செல்ல முற்பட்டதும், உண்டு களித்ததும் பெரும் விசனத்துக்கு உள்ளாகியுள்ளது.

வவுனியாவில் வீதியோரக் கடைகள் அகற்றம்; பழங்களை உண்டு மகிழ்ந்த ஊழியர்கள் வவுனியா மாநகரசபையால் இன்று யாழ் வீதியில் வீதியோரங்களில் உள்ள  சில கடைகளை போக்குவரத்துக் இடையூறாக இருப்பதாக தெரிவித்து அகற்றப்பட்டிருந்தது.இவ்வாறு அகற்றப்பட்ட வீதியோரக் கடைகளில் இருந்த பழங்கள், மரக்கறிகள் உழவியந்திரத்தில் ஏற்றி மாநகர சபை வளாகத்துக்கு கொண்டு செல்லப்பட்டிருந்தது.குறித்த பொருட்கள் மாநகர சபை வளாகத்துக்கு கொண்டு சென்றதன் பின்னர் அங்கிருந்த ஊழியர்கள் அப்பழங்களை பைகளில் இட்டு தாம் கொண்டு செல்வதற்கு தயாராக இருந்ததோடு சிலர் பழங்களை உண்டு மகிழ்ந்ததையும் அவதானிக்க கூடியதாக காணப்பட்டது.வீதியோரத்தில் வாழ்வாதாரத்துக்காக தொழில் செய்தவர்களின் பொருட்களை உழவியந்திரத்தில் ஏற்றி சென்ற மாநகரசபை ஊழியர்கள், குறித்த பொருட்களை தாம் எடுத்துச் செல்ல முற்பட்டதும், உண்டு களித்ததும் பெரும் விசனத்துக்கு உள்ளாகியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement