• Sep 04 2025

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் வெட்டுப்புள்ளி குறித்த விபரம்

Chithra / Sep 4th 2025, 7:57 am
image

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் நேற்று நள்ளிரவு வெளியாகின. 

இதன்படி, இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.doenets.lk அல்லது www.results.exams.gov.lk ஆகிய இணையத்தளங்களினூடாக பெறுபேறுகளைப் பார்வையிட முடியும். 

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை கடந்த ஓகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி நடத்தப்பட்டது. 

நாடளாவிய ரீதியில் 2,787 பரீட்சை நிலையங்களில் நடத்தப்பட்ட இந்தப் பரீட்சையில், மூன்று இலட்சத்து 7 ஆயிரத்து 951 மாணவர்கள் தோற்றியிருந்தனர்.  

இதனிடையே, தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் ஒவ்வொரு மாவட்டத்திற்குமான வெட்டுப்புள்ளியை பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது. 

இதற்கமைய, கொழும்பு, களுத்துறை, கண்டி, காலி, மாத்தறை, குருநாகல், மாத்தளை மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களில் தமிழ் மொழிமூல பாடசாலைகளுக்கான வெட்டுப்புள்ளி 134 ஆக அறிவிக்கப்பட்டுள்ளது. 

அத்துடன், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு, மட்டக்களப்பு, அம்பாறை, நுவரெலியா, பதுளை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கான வெட்டுப்புள்ளி 132 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

மேலும், திருகோணமலை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் தமிழ் மொழிமூல பாடசாலைகளுக்கான வெட்டுப்புள்ளி 131 ஆகப் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் வெட்டுப்புள்ளி குறித்த விபரம் 2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் நேற்று நள்ளிரவு வெளியாகின. இதன்படி, இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.doenets.lk அல்லது www.results.exams.gov.lk ஆகிய இணையத்தளங்களினூடாக பெறுபேறுகளைப் பார்வையிட முடியும். 2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை கடந்த ஓகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி நடத்தப்பட்டது. நாடளாவிய ரீதியில் 2,787 பரீட்சை நிலையங்களில் நடத்தப்பட்ட இந்தப் பரீட்சையில், மூன்று இலட்சத்து 7 ஆயிரத்து 951 மாணவர்கள் தோற்றியிருந்தனர்.  இதனிடையே, தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் ஒவ்வொரு மாவட்டத்திற்குமான வெட்டுப்புள்ளியை பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது. இதற்கமைய, கொழும்பு, களுத்துறை, கண்டி, காலி, மாத்தறை, குருநாகல், மாத்தளை மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களில் தமிழ் மொழிமூல பாடசாலைகளுக்கான வெட்டுப்புள்ளி 134 ஆக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு, மட்டக்களப்பு, அம்பாறை, நுவரெலியா, பதுளை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கான வெட்டுப்புள்ளி 132 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், திருகோணமலை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் தமிழ் மொழிமூல பாடசாலைகளுக்கான வெட்டுப்புள்ளி 131 ஆகப் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement