• Sep 04 2025

பையொன்றில் கண்டுபிடிக்கப்பட்ட மனித எலும்புக் கூட்டு எச்சங்கள் - தென்னிலங்கையில் பரபரப்பு

Chithra / Sep 4th 2025, 10:27 am
image

கம்பஹா - வெயாங்கொடை - நைவல பகுதியில் உள்ள வீடொன்றிற்கு அருகில் சந்தேகத்திற்கிடமான முறையில் இருந்த பையொன்றில்  4 மனித மண்டை ஓடுகள் மற்றும் பல எலும்புத் துண்டுகளை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

வீட்டின் கேரேஜை ஒட்டிய ஒரு அறையில் கிராம அலுவலர் அலுவலகம் அமைந்துள்ளது.

கிராம அலுவலர், எலும்புக்கூடுகள் அடங்கிய பையைக் கவனித்து பொலிஸாருக்கு தெரிவித்துள்ளார்.

குறித்த நிலத்தை சில ஆண்டுகளுக்கு முன்பு  வைத்தியர் ஒருவர் வாங்கியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும்,  அடையாளம் தெரியாத யாரோ ஒருவர் 4 மனித மண்டை ஓடுகள் மற்றும் எலும்புத் துண்டுகளை இந்த இடத்திற்கு கொண்டு வந்திருக்கலாம் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.  

பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

பையொன்றில் கண்டுபிடிக்கப்பட்ட மனித எலும்புக் கூட்டு எச்சங்கள் - தென்னிலங்கையில் பரபரப்பு கம்பஹா - வெயாங்கொடை - நைவல பகுதியில் உள்ள வீடொன்றிற்கு அருகில் சந்தேகத்திற்கிடமான முறையில் இருந்த பையொன்றில்  4 மனித மண்டை ஓடுகள் மற்றும் பல எலும்புத் துண்டுகளை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.வீட்டின் கேரேஜை ஒட்டிய ஒரு அறையில் கிராம அலுவலர் அலுவலகம் அமைந்துள்ளது.கிராம அலுவலர், எலும்புக்கூடுகள் அடங்கிய பையைக் கவனித்து பொலிஸாருக்கு தெரிவித்துள்ளார்.குறித்த நிலத்தை சில ஆண்டுகளுக்கு முன்பு  வைத்தியர் ஒருவர் வாங்கியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.மேலும்,  அடையாளம் தெரியாத யாரோ ஒருவர் 4 மனித மண்டை ஓடுகள் மற்றும் எலும்புத் துண்டுகளை இந்த இடத்திற்கு கொண்டு வந்திருக்கலாம் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.  பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement