• Jul 13 2025

மூலோபாய ஒத்துழைப்பை வலுப்படுத்த இலங்கையும் சீனாவும் இணக்கம்

Chithra / Jul 13th 2025, 2:33 pm
image


இலங்கையுடன், நீடித்த நட்பு மற்றும் நேர்மையான பரஸ்பர உதவியை அடிப்படையாகக் கொண்ட, கூட்டுறவைக் கட்டியெழுப்புவதற்குத் தயாராக உள்ளதாக, சீனா அறிவித்துள்ளது. 

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில், வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்துடனான சந்திப்பின்போது, சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யி இதனைக் குறிப்பிட்டுள்ளார். 

இரு தரப்பினரும் சீனாவின் பட்டுப்பாதை திட்டத்தில் இணைந்து செயல்படுவதற்கு இணக்கம் வெளியிட்டனர். 

அத்துடன், முக்கியமான கட்டுமான திட்டங்களை விரைவாக நிறைவேற்றுவதற்கும், சுதந்திர வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தைகளைத் துரிதமாக மேற்கொள்வதற்கும் ஒப்புக் கொண்டனர். 

இதன்போது, கொழும்பு துறைமுக நகரம் மற்றும் ஹம்பாந்தோட்டை துறைமுகம் போன்ற பாரிய திட்டங்கள் இரு நாடுகளுக்கும் நன்மை பயக்கும் என இதன்போது வாங் யி தெரிவித்துள்ளார்.  

சீன - இலங்கை கடல்சார் ஒத்துழைப்பானது, பரஸ்பர நன்மை பயக்கும் எனக் குறிப்பிட்ட அவர், அது மூன்றாம் தரப்பினரை இலக்காகக் கொண்டதல்ல எனவும் சுட்டிக் காட்டியுள்ளார். 

இந்த நிலையில், மூன்றாம் தரப்பு அதில் தலையிடக் கூடாது என்றும் சீன அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். 

 


மூலோபாய ஒத்துழைப்பை வலுப்படுத்த இலங்கையும் சீனாவும் இணக்கம் இலங்கையுடன், நீடித்த நட்பு மற்றும் நேர்மையான பரஸ்பர உதவியை அடிப்படையாகக் கொண்ட, கூட்டுறவைக் கட்டியெழுப்புவதற்குத் தயாராக உள்ளதாக, சீனா அறிவித்துள்ளது. மலேசிய தலைநகர் கோலாலம்பூரில், வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்துடனான சந்திப்பின்போது, சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யி இதனைக் குறிப்பிட்டுள்ளார். இரு தரப்பினரும் சீனாவின் பட்டுப்பாதை திட்டத்தில் இணைந்து செயல்படுவதற்கு இணக்கம் வெளியிட்டனர். அத்துடன், முக்கியமான கட்டுமான திட்டங்களை விரைவாக நிறைவேற்றுவதற்கும், சுதந்திர வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தைகளைத் துரிதமாக மேற்கொள்வதற்கும் ஒப்புக் கொண்டனர். இதன்போது, கொழும்பு துறைமுக நகரம் மற்றும் ஹம்பாந்தோட்டை துறைமுகம் போன்ற பாரிய திட்டங்கள் இரு நாடுகளுக்கும் நன்மை பயக்கும் என இதன்போது வாங் யி தெரிவித்துள்ளார்.  சீன - இலங்கை கடல்சார் ஒத்துழைப்பானது, பரஸ்பர நன்மை பயக்கும் எனக் குறிப்பிட்ட அவர், அது மூன்றாம் தரப்பினரை இலக்காகக் கொண்டதல்ல எனவும் சுட்டிக் காட்டியுள்ளார். இந்த நிலையில், மூன்றாம் தரப்பு அதில் தலையிடக் கூடாது என்றும் சீன அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.  

Advertisement

Advertisement

Advertisement